சீற்றா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Mrmw பயனரால் செய்யப்பட்ட 13:33, 6 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File:Phoenician zayin.pngFile:Phoenician zayin.svg vva)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Zeta uc lc.svg
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

சீற்றா (Zeta, கிரேக்கம்: ζήτα) அல்லது சீட்டா (தமிழக வழக்கு) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஆறாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஏழு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான சயினிலிருந்தே (Zayin) சீற்றா பெறப்பட்டது. சீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து Z, சிரில்லிய எழுத்து З என்பனவாகும்.

பெயர்

ஏனைய கிரேக்க எழுத்துகளைப் போல் இவ்வெழுத்து பினீசிய எழுத்தின் பெயரிலிருந்து தனது பெயரை எடுக்கவில்லை. பீற்றா, ஈற்றா, தீற்றா என்பன போன்ற ஒலியுடன் சீற்றா என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சீற்றா என்பது உரோம எழுத்து Zஐக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

பயன்பாடுகள்

எண்

கிரேக்க எண்களில், அல்ஃபா, பீற்றா, காமா, தெலுத்தா, எச்சைலன் முதலியவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பெறுமானங்களைக் குறி்த்தாலும் சீற்றா என்பது வேறுபட்டு ஏழு என்ற பெறுமானத்தையே குறிக்கிறது.[3] திகம்மா என்ற எழுத்தே ஆறு என்ற பெறுமானத்தை உடையது.[4]

கணிதம்

கணிதத்தில் இரீமன் சீற்றாச் சார்பியத்தைக் குறிப்பதற்குச் சீற்றா பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்

சீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
  2. கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
  3. கிரேக்க எண் முறைமைகள் (ஆங்கில மொழியில்)
  4. ["பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-16. Retrieved 2012-04-26. பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)]
  5. 2005-சீற்றாப் புயல் (ஆங்கில மொழியில்)
"https://tamilar.wiki/w/index.php?title=சீற்றா&oldid=364005" இலிருந்து மீள்விக்கப்பட்டது