துப்ருக்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 04:27, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 42 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இரவு நேரத்தில் டோப்ருக்

துப்ருக் (டொப்ருக், Tobruk, அரபி:طبرق‎) லிபியாவிலுள்ள ஒரு துறைமுக நகரம். நடுநிலக்கடல் கரையோரமாக அல் புட்னான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 3,00,000. பண்டைய கிரேக்கர்களின் காலத்தில் அவர்கள் வாழ்ந்த காலனி ஒன்றும், உரோமப் பேரரசின் காலத்தில் ஒரு கோட்டை ஒன்றும் இங்கு இருந்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்நகரம் டோப்ருக் முற்றுகையில் பெருத்த சேதமடைந்தது. போருக்குப் பின் மீண்டும் சீரமைக்கப்பட்டு இப்போது லிபியாவின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=துப்ருக்&oldid=401490" இலிருந்து மீள்விக்கப்பட்டது