தோமரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:44, 21 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதார நூற்பட்டியல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தோமரா (Tomara) 9-12ஆம் நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் தற்கால தில்லி மற்றும் அரியானா பகுதிகளை ஆண்ட இராசபுத்திர அரச குலத்தினர் ஆவார். 12ஆம் நூற்றாண்டில் சௌகான் இராசபுத்திர குலத்தினர் தோமாரா குலத்தினரை வென்றனர்.

வரலாறு

கூர்ஜர பிரதிகாரப் பேரரசர் முதலாம் மகேந்திரபாலனின் (885-910) ஆட்சிக் காலத்திய பொஹோவா (Pehowa) கல்வெட்டுகளில் தோரமரர்களைக் குறித்துள்ளது. கூர்ஜர பிரதிகார வம்சத்தின் விழ்ச்சியின் போது தோமரர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆண்டனர். [1] தோமர குலத்தின் நிறுவனரான முதலாம் அனங்கபாலன் கி பி 736இல் தில்லியை நிறுவினார். [2]

தேஜாபாலன், மந்தனபாலன், கீர்த்திகாபாலன், லக்கன்பாலன் மற்றும் பிருதிவிபாலன் ஆகியோர் அனங்கபாலனின் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படுகின்றனர். [3] தோமார வம்சத்தின் இறுதி மன்னர், தில்லி ஆட்சியை தனது மருமகன் பிரிதிவிராச் சௌகானிடம் ஒப்படைத்தார். [4]

மேற்கோள்கள்

  1. Swati Datta 1989, ப. 102.
  2. Sailendra Nath Sen 1999, ப. 339.
  3. Buddha Prakash 1965, ப. 182.
  4. P. C. Roy 1980, ப. 95.

ஆதார நூற்பட்டியல்

"https://tamilar.wiki/w/index.php?title=தோமரா&oldid=408862" இலிருந்து மீள்விக்கப்பட்டது