நெபுலா

தமிழர்விக்கியிலிருந்து
imported>செல்வா பயனரால் செய்யப்பட்ட 18:25, 12 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Eagle nebula pillars.jpg
கழுகு ஒண்முகில்
படிமம்:Nursery of New Stars - GPN-2000-000972.jpg

சூரியக் குடும்பதிற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஈலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன திரளான முகிலே ஒண்முகில் அல்லது நெபுலா (Nebula) ஆகும். நெபுலா என்ற இலத்தீனச் சொல்லுக்கு பனிமூட்டம் அல்லது புகை என்று பொருள்.[1] முதன்முதலாக சிறிய தொலைநோக்கிகளின் மூலம் அறிவியலாளர்கள் வானத்தைப் பார்க்க தொடங்கியபோது ஒளியுடன் கூடிய புகை போன்ற அமைப்புகளைக் கண்டார்கள். பழமையான ஒண்முகில்களில் புதிய பல விண்மீன்கள் உருவாகும். உதாரணமாகக் கழுகு ஒண்முகிலைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து விண்மீன்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்களாக உருவாகின்றன.

வகைகள்

பரவல் ஒண்முகில்

கோள்களின் ஒண்முகில்

கோள்முன் ஒண்முகில்

மீயொளிர் விண்மீன் வெடிப்பின் மீதிகள்

ஒண்முகில்களுக்கான சில உதாரணங்கள்

  • எறும்பு ஒண்முகில்
  • பர்நாடு சுழற்சி
  • பூமரங் ஒண்முகில்
  • பூனைக் கண் ஒண்முகில்
  • நண்டு விண்மீன் மண்டலம்
  • கழுகு ஒண்முகில்
  • எஸ்கிமோ ஒண்முகில்
  • ஈட்டா ஒண்முகில்
  • சுருள் ஒண்முகில்
  • ஓய்வெடுத்து ஒண்முகில்
  • குதிரைத் தலை ஒண்முகில்
  • ஓரியன் ஒண்முகில்
  • பெலிகன் ஒண்முகில்
  • செஞ்சதுர ஒண்முகில்
  • கங்கண ஒண்முகில்
  • ரொசெட் ஒண்முகில்

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Nebula, Online Etymology Dictionary
"https://tamilar.wiki/w/index.php?title=நெபுலா&oldid=420046" இலிருந்து மீள்விக்கப்பட்டது