லெகியான்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ksmuthukrishnan பயனரால் செய்யப்பட்ட 11:01, 4 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{Infobox settlement |official_name = லெகியான் |native_name = {{nobold|Legian}} |settlement_type = கடற்கரை நகரம் |motto = |image_skyline =Legian Beach SF0001.jpg |imagesize = 300px |image_caption = {{br0.2em}} லெகியான் கடற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
லெகியான்
Legian
கடற்கரை நகரம்
லெகியான் கடற்கரை சின்னம் (2023)
லெகியான் கடற்கரை சின்னம் (2023)
அலுவல் சின்னம் லெகியான்
சின்னம்
லெகியான் is located in இந்தோனேசியா
லெகியான்
லெகியான்
ஆள்கூறுகள்: 8°42′02″S 115°09′54″E / 8.70056°S 115.16500°E / -8.70056; 115.16500
நாடு இந்தோனேசியா
மாநிலம்சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பாலி
பிராந்தியம்பாடுங் பிராந்தியம்
மாவட்டம்கூத்தா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்305 km2 (118 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்4,216 (2,016)
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +8
அஞ்சல் குறியீடு
80361

லெகியான் (ஆங்கிலம்: Legian; இந்தோனேசியம்: Legian, Kuta, Badung) என்பது இந்தோனேசியா, பாலி, பாடுங் பிராந்தியம், கூத்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை புறநகர்ப் பகுதி ஆகும்.[1] பாலியின் மேற்கு கடற்கரையில் கூத்தா நகரத்திற்கு வடக்கேயும்; செமினியாக் நகரத்திற்கு தெற்கேயும் உள்ளது.[2][3]

கூத்தா மாவட்டத்தில் உள்ள அமைந்துள்ள 5 கிராமங்கள்/துணை மாவட்டங்களில் லெகியான் ஒன்றாகும்.

வரலாறு

லெகியான் பகுதி முன்பு காராங் கெமானிசான் என்ற கிராமத்திலிருந்து தொடங்கியது. காராங் என்றால் கிராமம் என்று பொருள். கெமானிசான் என்றால் இனிப்பு என்று பொருள். மானிஸ் என்ற சொல்லிருந்து வந்தது. "லெகி" என்ற சொல்லும் அதே இனிப்பு என்ற சொல்லைக் கொண்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்தப் பகுதி லெகியான் என்று அறியப்பட்டது. லெகியான் என்பது நகரம் மட்டும் அல்ல. இது ஒரு துணை மாவட்டமும் ஆகும்.

இந்தத் துணை மாவட்டம் 2002 பாலி குண்டுவெடிப்பு நிகழ்வாலும் பாதிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய தீவிரவாதத் தாக்குதலாக இது கருதப்படுகிறது. மொத்தம் 202 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 164 பேர் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் ஆவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியர்கள்.[4].

படிமம்:Legian banner.jpg
லெகியான் கடற்கரை

காட்சியகம்

  • லெகியான் காட்சிப் படங்கள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Legian - Indonesia Travel". www.indonesia.travel (in ஆங்கிலம்). Retrieved 2020-04-30.
  2. "Legian Travel Guide". Almost Landing - Bali (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-04-30.
  3. "Legian Beach Tourism". www.indonesia-tourism.com. Retrieved 2020-04-30.
  4. Indonesia seeks access US held Hambali

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=லெகியான்&oldid=488793" இலிருந்து மீள்விக்கப்பட்டது