வாட் அருண்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:22, 19 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (InternetArchiveBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Wat Arun from Chao Phraya River.jpg
சாவோ பிரயா ஆற்றில் இருந்து கோவிலின் தோற்றம்

வாட் அருண் (Wat Arun) என்பது தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் உள்ள ஒரு பௌத்தக் கோயில் ஆகும்.[1] இக்கோவில் சாவோ பிராயா ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா என்பது.

இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் பிராங் என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன.

இக்கோயில் கட்டப்பட்ட போது வாட் மகோக் எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் வாட் சேங் எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.

மேற்கோள்கள்

  1. "Wat Arun - The Temple of Dawn". Archived from the original on 2018-02-22. Retrieved 2018-03-12.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வாட்_அருண்&oldid=494542" இலிருந்து மீள்விக்கப்பட்டது