அசீனா மொயின்
| அசீனா மொயின் | |
|---|---|
| படிமம்:Haseena Moin.jpg | |
| தாய்மொழியில் பெயர் | حسینہ معین |
| பிறப்பு | 20 நவம்பர் 1941 கான்பூர், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 26 March 2021 (aged 79)[1] கராச்சி, சிந்து மாகாணம், பாக்கித்தான் |
| தேசியம் | பாகிஸ்தானியர் |
| மற்ற பெயர்கள் | அசீனா அபா |
| படித்த கல்வி நிறுவனங்கள் | அரசு மகளிர் கல்லூரி, கராச்சி பல்கலைக்கழகம் |
| பணி | திரைக்கதை ஆசிரியர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், கல்வியாளர், தலைமையாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1970–2021 |
| விருதுகள் | 1987 ஆம் ஆண்டு பாக்கித்தான் அரசுத் தலைவாரால் வழங்கப்பட்ட பெருமைக்குரிய செயல்திறனுக்கான விருது |
அசீனா மொயின் (Haseena Moin) (20 நவம்பர் 1941-26 மார்ச் 2021) பாக்கித்தானைச சேர்ந்த நாடக ஆசிரியரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். மேடை, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பல நாடகங்களை எழுதினார். பாக்கித்தானில் நிகழ்த்து கலைகளுக்கு இவர் செய்த சேவைகளுக்காக செயல்திறன் பெருமை விருதைப் பெற்றார். 1970 களின் முற்பகுதியில் ஒளிபரப்பான பாக்கித்தான் தொலைக்காட்சியின் கிரண் கஹானி என்ற அசல் தொடரை இவர் எழுதினார். பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு அதன் நாடகங்களுக்கு புதினங்கள் அடிப்படையிலான எழுத்துகளையே நம்பியிருந்தது. பாக்கித்தான் அதுவரை கண்டிராத சிறந்த உருது நாடக ஆசிரியராக இவர் கருதப்பட்டார்.[2][3][4]
அங்காஹி, தன்ஹையான், கிரண் கஹானி, தூப் கினாரே, ஆஹத், மாமா உர்ஃபி, ஷெஷோரி, கோஹர், தேஸ் பர்தேஸ், பால் தோ பால், அன்சூ, கசக், பர்ச்சையன் மற்றும் பரோசி ,மேரே டார்ட் கோ ஜோ ஜுபன் மிலே, கைசா யே ஜூனூன், துண்டில் ராஸ்தே, ஷயத் கே பஹார் ஆயே, மோஹிம் ஜூ, தும் சே மில் கர், பந்திஷ் மற்றும் ஜைர், ஜாபர், பேஷ் ஆகியவை இவர் எழுதிய சில நாடகங்களில் அடங்கும்.[5]
இளமை வாழ்க்கை
அசீனா மொயின், பிரித்தானிய இந்தியாவின் ஐக்கிய மாகாணத்திலிருந்தகான்பூரில் 20 நவம்பர் 1941 அன்று பிறந்தார். 1947 இல் பாக்கித்தான் சுதந்திரத்திற்குப் பிறகு, தனது குடும்பத்துடன் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இராவல்பிண்டியில் பல ஆண்டுகள் வசித்து, பின்னர் இலாகூருக்கு குடிபெயர்ந்தார். 1950 களில் கராச்சிக்கு குடியேறினார். அங்கு 1960 இல் பெண்களுக்கான அரசு கல்லூரியில் பட்டம் பெற்றார் மற்றும் 1963 இல் கராச்சி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். 7 ஆம் வகுப்பில் இருந்து, மற்ற பள்ளி நடவடிக்கைகளுடன், ஒரு உள்ளூர் பத்திரிகைக்கு பாய் ஜான் என்ற தலைப்பில் வாராந்திர கட்டுரையை எழுதிவந்தார்.[6][7]
கராச்சி, பாக்கிசுத்தான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்காக நாடகங்களை எழுதினார். தொழில் ரீதியாக, இவர் கல்வித் திட்டங்களை மேற்கொண்டு கற்பிக்கத் தொடங்கினார். அங்கு தலைமையாசிரியர் நிலைக்கு உயர்ந்தார். 1969 ஆம் ஆண்டில் கராச்சி வானொலி நிலையத்திற்கு ஈத் கா ஜோர்ரா என்ற நாடகத்தை எழுதினார்.[8][9]
தொழில் வாழ்க்கை
பாக்கித்தான் தொலைக்காட்சி
1970 களின் முற்பகுதியில் ஒளிபரப்பான பாக்கித்தானின் முதல் அசல் தொடரான 'கிரண் கஹானி' யையும் இவர் எழுதினார். இதற்கு முன்பு, பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனம் முன்பு அதன் நாடகங்களுக்கு புதினங்கள் அடிப்படையிலான எழுத்துகளையே நம்பியிருந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் இந்த பரிசோதனை முயற்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை.[10][11]
இந்தியத் தொலைக்காட்சி
1987 இல் என்ற தூப் கினாரே இவரது நாடகத் தொடரான ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொடரை அடிப்படையாகக் கொண்டு மறு ஆக்கம் செய்து இந்தியாவில் குச் தோ லோக் கஹெங்கே என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 2011 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. இதை பிரபல இந்திய எழுத்தாளர் கமலேஷ் பாண்டே எழுதினார். அவர் இந்த நாடகத்தை மறு ஆக்கம் செய்வதன் மூலம் அசீனா மொயினுக்கு மரியாதை செலுத்தியதாகக் கூறினார்.[12][13] இந்த நிகழ்ச்சிகள் இந்திய மக்களிடையே இன்னும் நினைவுகூரப்படுகின்றன.[14] அசீனா இந்தியாவுக்காக தன்ஹா என்ற நாடகத்தை எழுதினார். அது ஒளிபரப்பப்பட்ட போது பரவலாக பிரபலமானது. மேலும் தூர்தர்ஷனுக்காக கஷ்-எம்-கஷ் என்ற நாடகத்தையும் எழுதினார். இதற்கு அர்ஷத் மஹ்மூத் இசையமைத்திருந்தார். மேலும் நாடகத்தின் தலைப்புப் பாடலை டினா சானி பாடியிருந்தார்.[15]
அரசியல் நிலைப்பாடு
முன்னாள் பாக்கிதானிய துடுப்பாட்டத் தலைவரும் நன்கொடையாளருமான இம்ரான் கானால் நிறுவப்பட்ட பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு கட்சியில் இணைந்தார்.[16][17]
இறப்பு
கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த அசீனா மொயின் 26 மார்ச் 2021 அன்று தனது 79 வயதில் கராச்சியில் காலமானார்.[18] இவரது இறுதிச் சடங்குகள் கராச்சியிலுள்ள வடக்கு நசீமாபாத் பகுதியில் நடைபெற்றன. [19][20][21]
மேற்கோள்கள்
- ↑ "Renowned Pakistani playwright Haseena Moin passes away". thenews.com.pk. Retrieved 26 March 2021.
- ↑ "Pakistani Writer Haseena Moin". meriduniya11.com. Archived from the original on 28 January 2020. Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moin Biography". urduyouthforum.org. Archived from the original on 16 April 2013. Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moin". woman.com.pk. Archived from the original on 9 December 2018. Retrieved 11 February 2013.
- ↑ "Talented Drama Writer from Pakistan-Haseena Moin". pakistan360degrees.com. Archived from the original on 14 July 2014. Retrieved 5 October 2022.
- ↑ "HASEENA MOIN BIO". in.com. Archived from the original on 14 July 2014. Retrieved 11 February 2013.
- ↑ "Talented Drama Writer from Pakistan-Haseena Moin". pakistan360degrees.com. Archived from the original on 14 July 2014. Retrieved 5 October 2022."Talented Drama Writer from Pakistan-Haseena Moin".
- ↑ "Haseena Moin: Writer of Modern Drama". thinktwicepakistan.com. Archived from the original on 3 January 2013. Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moin Pakistani dramatist, playwright and scriptwriter". profilepk.com. Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moin: Writer of Modern Drama". thinktwicepakistan.com. Archived from the original on 10 November 2012. Retrieved 11 February 2013.
- ↑ "Kiran Kahani". ptvdramas.com. Archived from the original on 2 July 2013. Retrieved 11 February 2013.
- ↑ "Dhoop Kinare being remade after 25 years on Sony". in.omg.yahoo.com. Retrieved 11 February 2013.
- ↑ "India remakes 'Dhoop Kinare'". pakistantoday.com.pk. Retrieved 11 February 2013.
- ↑ "Dhoop Kinare, Tanhaiyaan still remembered fondly". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Dhoop-Kinare-Tanhaiyaan-still-remembered-fondly/articleshow/5406231.cms.
- ↑ "Indian soaps are a fashion parade —Haseena Moin". archives.dawn.com. 22 May 2008. Retrieved 11 February 2013.
- ↑ "People joining PTI". Archived from the original on 11 October 2011. Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moeen and other notable women join PTI in Islamabad". Retrieved 11 February 2013.
- ↑ "Haseena Moin receives coronavirus vaccine". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2021-05-21.
- ↑ "Haseena Moin, renowned playwright, dies aged 79". Geo TV News website (in ஆங்கிலம்). Retrieved 2021-03-26.
- ↑ "Haseena Moin passes away in Karachi". The Express Tribune (newspaper) (in ஆங்கிலம்). 2021-03-26. Retrieved 2022-10-05.
- ↑ "Haseena Moin, renowned dramatist and playwright, passes away at 79". Daily Pakistan Global (in ஆங்கிலம்). 2021-03-26. Retrieved 2021-03-26.