அச்சி ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அச்சி ஆறு
Aji River
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இராச்கோட்டில் உள்ள இரயில்வே பாலத்திலிருந்து ஆற்றுப் படுகையின் காட்சி
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
மண்டலம்சௌராட்டிர நாடு
மாவட்டம்இராச்கோட்டு மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம்
நகரம்இராச்கோட்டு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 • அமைவுஇயாசுதன் மலைத் தொடர், ராஜ்கோட் மாவட்டம், குசராத்து, இந்தியா
முகத்துவாரம்கச்சு வளைகுடா, அரபிக்கடல்
 • அமைவு
இரஞ்சித்துபரா[1] இயாம்நகர், குசராத்து, இந்தியா
 • ஆள்கூறுகள்
22°57′35″N 70°26′20″E / 22.9597139°N 70.438762°E / 22.9597139; 70.438762
நீளம்164 km (102 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 • இடதுநியாரி ஆறு
படிமம்:Rajkot - Aji River Overview.jpg
இராச்கோட்டு வழியாக பாயும் அச்சி ஆற்றின் வான்வழி படம்

அச்சி ஆறு (Aji River) இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள சௌராட்டிர பிராந்தியத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும்.[2] இது இராச்கோட்டை கிழக்கு-மேற்கு பகுதிகளாகப் பிரிக்கிறது.[3] அச்சி ஆற்றில் நான்கு அணைகள் உள்ளன. இந்த ஆற்றின் நீர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

நீர்த்தேக்கங்கள்

  • இராச்கோட்டு-அச்சி I நீர்த்தேக்கம் [4]
  • இராச்கோட்டு-அச்சி II நீர்த்தேக்கம் [5]
  • பாததாரி-அச்சி III நீர்த்தேக்கம் [6]
  • இயோடியா-அச்சி IV நீர்த்தேக்கம் [7]

சுத்திகரிப்புத் திட்டம்

இராச்கோட்டு மாநகராட்சி அச்சி நதியை சுத்திகரிப்பதற்கும், இரு முனைகளிலும் தக்கவைப்பு சுவர்கள் மற்றும் தோட்டங்களை வழங்குவதற்கும் ஒரு திட்டத்தை தொடங்கியது.[8] சர்தார் மற்றும் இங்கோல்கட்டு மலைப்பகுதிகளில் இருந்து உருவாகி, 250 கி. மீ நீளமுள்ள அச்சி ஆறு கட்ச் வளைகுடாவில் பாய்கிறது.  அட்கோட்டு அருகிலுள்ள சர்தார் மலைகளில் இருந்து உருவாகும் நியாரி, கோகல்தடி, பாங்குடி மற்றும் தோந்தி ஆறுகள் அச்சி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் சிலவாகும். அச்சி ஆற்றில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் எதுவும் நீர்ப்பாசனத்திற்கான எந்த கால்வாய் அமைப்புகளையும் ஆதரிக்கவில்லை.

2017 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சௌராட்டிரா நர்மதா அவதாரன் பாசனத் திட்டத்தின் கீழ் இராச்கோட்டு அருகே அச்சி அணையை நிரப்புவதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.[9]

மேற்கோள்கள்

  1. "Mouth Location பரணிடப்பட்டது 31 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்", Retrieved on 14 January 2008
  2. "Aji dam overflows". The Times of India. 27 September 2013. Retrieved 8 March 2022.
  3. "Rajkot and Aji River பரணிடப்பட்டது 24 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்", Retrieved on 14 January 2008
  4. "Aji I Dam D06235". India-WRIS. Archived from the original on 30 December 2018. Retrieved 29 December 2018.
  5. "Aji II Dam D02457". India-WRIS. Archived from the original on 30 December 2018. Retrieved 29 December 2018.
  6. "Aji III Dam D02620". India-WRIS. Archived from the original on 30 December 2018. Retrieved 29 December 2018.
  7. "Aji IV Dam D03151". India-WRIS. Archived from the original on 30 December 2018. Retrieved 29 December 2018.
  8. "Purification Project[தொடர்பிழந்த இணைப்பு]". Retrieved on 14 January 2008
  9. "PM inaugurates filling of Aji Dam under Sauni Yojana". pib.gov.in.
"https://tamilar.wiki/w/index.php?title=அச்சி_ஆறு&oldid=238337" இலிருந்து மீள்விக்கப்பட்டது