அவேகா சிங்
| சுய தகவல்கள் | |||
|---|---|---|---|
| பிறந்த நாள் | 30 திசம்பர் 2003 | ||
| பிறந்த இடம் | தில்லி, இந்தியா | ||
| ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் (காற்பந்துச் சங்கம்) | ||
| இளநிலை வாழ்வழி | |||
| 2016 | FCBEscola India | ||
| கல்லூரி வாழ்வழி | |||
| ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
| 2021– | யுசி இர்வின் ஆன்டீட்டர்ஸ் | 6 | (0) |
| முதுநிலை வாழ்வழி* | |||
| ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
| 2020–2021 | கான்ஸ் கேபிடல் | ||
| 2022–2023 | தெரசா கால்பந்து அணி | ||
| பன்னாட்டு வாழ்வழி | |||
| 2017–2020 | இந்திய மகளிர் தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி | 11 | (5) |
| *கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. | |||
அவேகா சிங் (Aveka Singh) இவர் இந்தியாவில் அம்மைந்துள்ள டெல்லியில் 2003 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் தேதி பிறந்தார். அவேகா இந்திய தொழில்முறை கால்பந்து வீரராவார். இவர் யுசி இர்வின் ஆன்டீட்டர்ஸ் அணிக்காக மிட்பீல்டராக விளையாடி வருகின்றார்.
ஆரம்பகால வாழ்க்கை
அவேகா சிங் தனது ஐந்து வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கினார். இந்தியாவில் பள்ளியில் கால்பந்து விளையாடினார். பிரேசில் சர்வதேச வீரர் நெய்மரை தனது கால்பந்து முன்மாதிரியாக இவர் கருதினார்.[1]
கல்வி
சிங் அமெரிக்காவின் இர்வின் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்றார். தடகள உதவித்தொகை பெற்று அந்தப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். வணிகப் பொருளாதாரம் பயின்றார்.[2]
விளையாட்டு போட்டிகள்
சிங் "ஜூனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்ல் விளையாடினார். மேலும் ஹீரோ 17 வயதிற்குட்பட்ட கால்பந்து மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் விளையாடியதாகக் கருதப்பட்டார்" என்று விவரிக்கப்பட்டார்.[3] இவர் அமெரிக்க அணியான யூசி இர்வின் ஆன்டீட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடினார். இவர் ஸ்பானிஷ் அணியான டெர்ராசா அணிக்காகவும் விளையாடினார். அமெரிக்க ஆஃப்-சீசனில் இவர் கிளப்பிற்காக விளையாடினார்.[4]
சர்வதேச போட்டிகள்
சிங் ஒரு இந்திய இளைஞர் சர்வதேச கால்பந்து வீராங்கனை ஆவார். இந்திய மகளிர் தேசிய 15 வயதுக்குட்பட்ட கால்பந்து அணி 2018 ஆண்டு தெற்காசிய கால்பந்து பெடரேசன் 15 வயதுக்குட்பட்ட மகளிர் சாம்பியன்ஷிப்பை வெல்ல இவர் காரணமாக அமைந்தார்.[2] அவர் சர்வதேச மகளிர் கால்பந்து உலகக் கோப்பையில் இந்திய மகளிர் தேசிய 17 வயதுக்குட்பட்ட கால்பந்து அணிக்காக விளையாடியிருக்கலாம், ஆனால் அது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது.[3] அவர் "தற்போதைய பெண்கள் சீனியர் அணி பயிற்சியாளர் மேமோல் ராக்கியின் கீழ் சர்வதேச அளவில் அறிமுகமானார்" என்பது குறிப்பிடதக்கது.[3] She was described as "made her international debut under current women's senior team coach Maymol Rocky".[1]
விளையாட்டு பாணி
சிங் முக்கியமாக மிட்ஃபீல்டராக செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில் இவர் இடதுசாரி வீரராக செயல்பட்டார். அதன் பிறகு, அவர் மிட்ஃபீல்டராக மாறினார் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
சிங் ஒரு இந்திய கல்லூரி கோல்ப் வீரரின் மகள் ஆவார். இவர் இந்தியாவின் டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.[4] மேலும் சிங் இங்கிலாந்து அணியான ஆர்சனலின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.[4] She has been a supporter of English side Arsenal.[5]
வெளி இணைப்புகள்
- Aveka Singh at All India Football Federation
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Aveka Singh aims to emulate idol Neymar". thehindu.com.
- ↑ 2.0 2.1 "US football is more dynamic and vertical, shares Aveka Singh". khelnow.com.
- ↑ 3.0 3.1 "India U-17 footballer Aveka Singh signs for American college". thebridge.in.
- ↑ 4.0 4.1 "Infrastructure, investment, belief: Indian footballer Aveka Singh's three keys to lift Indian women's football". news9live.com.
- ↑ "Aveka Singh". ucirvinesports.com.