இயைபு வண்ணம்
Jump to navigation
Jump to search
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
இயைபு வண்ணம் என்பது செய்யுளில் இடையின எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- வால்வெள் ளருவி வரைமிசை இழியவும்
- கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும்
- வாளுகிர் உளுயம் வரையகம் இசைப்பவும்
- வேலொளி விளக்கினர் வரினே
- யாரே தோழி வாழ்கிற் போரே. [1]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ யாப்பருங்கல விருத்தி மேற்கோள்