இரத்ன மல்லர்
| இரத்ன மல்லர் | |
|---|---|
பக்தபூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள இரத்ன மல்லனின் பௌபா ஓவியம் | |
| காந்திபூரின் அரசன் | |
| ஆட்சிக்காலம் | 1482–1520 |
| முன்னையவர் | ஜெய யக்ச மல்லர் |
| பின்னையவர் | சூர்ய மல்லர் |
| பிறப்பு | நேபாளம் |
| இறப்பு | 1520 நேபாளம் |
| குழந்தைகளின் பெயர்கள் | சூர்ய மல்லர் |
| அரசமரபு | மல்லர் வம்சம் |
| தந்தை | ஜெய யக்ச மல்லர் |
இரத்ன மல்லர் (Ratna Malla) மல்லர் வம்சத்தைச் சேர்ந்த ம்ன்னரும் மற்றும் காந்திபூரின் முதல் சுதந்திர மன்னரும் ஆவார்.[1] யக்சமல்லனின் ஆறு மகன்களில் இவரும் ஒருவர்.
ஆட்சி
1482-இல் இவரது தந்தை இறந்த பிறகு, இவரும் இவரது சகோதரர்களும் கூட்டாக ஆட்சி செய்ய முயன்றனர். இருப்பினும், இரத்ன மல்லர் ஒரு சுதந்திர ஆட்சியாளராக மாற முடிவு செய்து, 1484 ஆம் ஆண்டில் காத்மாண்டுவை தலைநகராகக் கொண்டு காந்திபூர் இராச்சியத்தை உருவாக்கினார்.[2] காத்மாண்டுவிற்கு காஷ்மீர் முஸ்லிம் வர்த்தகர்களை அழைத்த முதல் நேபாள மன்னர் இவர்தான்.[3] இவரது அண்ணன் இராய மல்லர் பக்தபூரின் மன்னராக இருந்தார்.[4]
இரத்ன மல்லரும் சிறிது காலம் இலலித்பூரை ஆட்சி செய்தார். மேலும் பால்பா இராச்சியத்தின் உதவியுடன் தாகூரி நிலப்பிரபுக்களின் கிளர்ச்சியையும், போட்டியாவையும் அடக்கினார். இரத்ன மல்லரின் ஆட்சிக் காலத்தில்தான் மிதிலை பிரதேசம் மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த துறவிகள் , இந்து மற்றும் பௌத்த மதகுருமார்கள் வழக்கமாகக் கொண்டிருந்த நீதிமன்ற விவகாரங்களில் முக்கியத்துவம் பெறத் தொடங்கினர். இவர் இன்றைய சிட்லாங்கில் உள்ள உள்ளூர் செப்புச் சுரங்கங்களைப் பயன்படுத்தி செப்பு நாணயங்களை விநியோகித்தார்.[5][6]
இவர் 38 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரது மரணத்திற்குப் பிறகு 1520 இல் இவரது மகன் சூர்ய மல்லர் பதவியேற்றார்.
மேற்கோள்கள்
- ↑ Hasrat, Bikrama Jit; Williams, Donovan (1971). History of Nepal: As Told by Its Own and Contemporary Chroniclers. Hoshiarpur, Punjab: V.V. Research Institute Book Agency. p. 56.
- ↑ "Hanuman Dhoka". Department of Archaeology. Ministry of Culture, Tourism and Civil Aviation, Department of Archaeology. 2011. Retrieved 15 May 2016.
- ↑ Siddika, Shamima (1993). Muslims of Nepal. Kathmandu: Gazala Siddika.
- ↑ Shrestha, Nagendra Prasad (2007). The Road to Democracy and Kingdom of God. Kathmandu: Shrijana Shrestha. p. 38. ISBN 9789994624621.
- ↑ Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF). University of Cambridge. p. 51.
- ↑ Shrestha, D.B. The History of Ancient and Medieval Nepal (PDF). University of Cambridge. pp. 30–31.