இராமவிஜயம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

இராம விஜயம் (Ramavijaya) என்பது மராத்தியில் சிறீதர் சுவாமி நசரேக்கரால் (1658-1729) இயற்றப்பட்ட பிரபலமான பக்தி இலக்கியமாகும்.[1] இதன் நேரடிப் பொருள் 'விஷ்ணுவின் அவதாரமான இராமருக்கு வெற்றி' என்பதாகும்.[2]

அறிமுகம்

"இராமவிஜயம்" 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 9147 இணையடிகளைக் கொண்டது (மராத்தியில் "ஓவிசு").[3][4] 1891ஆம் ஆண்டில், "இராமவிஜயம்" ஆங்கில மொழியில் மறுபதிப்பு செய்யப்பட்டு, பம்பாயின் துபாசி & கோவால் வெளியிடப்பட்டது.[5]

இராமவிஜயம் என்பது சிறீ இராமர் மற்றும் விஷ்ணுவின் வாழ்க்கை மற்றும் லீலைகளை மகிமைப்படுத்தும் ஒரு புனிதமான பக்தி நூல். சீரடி சாய்பாபாவின் பக்தர்களுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சாயி சத்சரிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இதைப் படிக்குமாறு பாபா அடிக்கடி தனது பக்தர்களிடம் கேட்பார்.

பாபா தனது மகாசமாதிக்கு முந்தைய இறுதி நாட்களில் இராமவிஜயத்தினைத் தனக்குத் தாரை வார்க்கும்படி கேட்டார். மேலும் இராமவிஜயம் ஆன்மீக முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறது.[6]

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, நடுத்தர வர்க்க மராத்தி பேசும் குடும்பங்களில் பெண்கள் கூடும் கூட்டத்தில் இராமவிஜயத்தை ஓதுவது வழக்கமாக இருந்தது.[7]

மேற்கோள்கள்

  1. Ayyappappanikkar (1997). Medieval Indian Literature: Surveys and selections. p. 371.
  2. Dinakar Dhondo Karve (1963). The New Brahmans: Five Maharashtrian Families. University of California Press. p. 19. He mentions Harivijay (Victory to God Hari [Shiva]), Ramavijay (Victory to Rama, an incarnation of Vishnu), Shivlilamrit (The Nectar of Shiva's Play), and Laghu-Guru-Charitra (The Story of Guru [the God Dattatreya]). These collections of legends about gods and supernatural figures are typical of traditional Marathi vernacular literature. The first three are by Shridhar (1678- 1728), the most prolific of marathi poets.
  3. Shri Ram Vijay (in Marathi). Gita Press. 2013.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. Shridhar Swami (2011). D.A.Ghaisas (ed.). Shri Ramvijay (in Marathi). Keshav Bhikaji Dhavale.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. Ramvijaya: The mythological story of Rama. Dubhashi&co. 1891.
  6. "Rama Vijaya - The Mythological History of Rama". House of Sai (in ஆங்கிலம்). 2025-02-13. Retrieved 2025-02-13.
  7. N, Gandhi; Reddy, Y Rama Govinda; Naik, K Rama; Ch, Vijaya (2025-02-13). "Rama Vijaya - The Mythological History of Rama". House of Sai (in ஆங்கிலம்). pp. 38–50. doi:10.33545/27068919.2025.v7.i2a.1362. Retrieved 2025-02-13.
"https://tamilar.wiki/w/index.php?title=இராமவிஜயம்&oldid=281229" இலிருந்து மீள்விக்கப்பட்டது