இரேகம் கான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இரேகம் கான்
ریحام خان
பிறப்புஇரேகம் நய்யார் கான்[1]
3 ஏப்ரல் 1973 (1973-04-03) (அகவை 53)[2][3][4]
அஜ்தாபியா, லிபியா
குடியுரிமைபிரித்தானியர், பாகிஸ்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜின்னா மகளிர் கல்லூரி
பணிபத்திரிக்கையாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது வரை
பெற்றோர்நய்யார் ரம்சான் (தந்தை)[1]
வாழ்க்கைத்
துணை
Ejaz Rehman
(தி. 1993; ம.மு. 2005)
[1]
இம்ரான் கான்
(தி. 2015; div. 2015)
[5]
Mirza Bilal (தி. 2022)
பிள்ளைகள்3
உறவினர்கள்அப்துல் ஹக்கிம் கான் (மாமா)
வலைத்தளம்
www.rehamkhanofficial.com

இரேகம் நய்யார் கான் (Reham Nayyar Khan) (பிறப்பு: 3 ஏப்ரல் 1973) ஒரு பிரித்தானியபாக்கித்தான் வம்சாவளியில் பிறந்த பத்திரிகையாளரும், எழுத்தாளரும் மற்றும் பாக்கித்தானின் பஃபாவைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[6][1][7] இவர், 2018 இல் பாக்கித்தான் பிரதமராக இருந்த இம்ரான் கானை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். 2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு இவரது நினைவுக் குறிப்பு வெளியிடப்பட்டது. இதன் வெளியீடு இம்ரான் கானின் தேர்தல் வாய்ப்புகளை சேதப்படுத்தும் நோக்கில் இருந்தது என்ற கூற்றுகளுக்கு வழிவகுத்தது.[8]

இளமை வாழ்க்கை

பாக்கித்தானிய மருத்துவரான நய்யார் ரம்சானுக்கு இரேகம் பிறந்தார்.[9] இவர் பஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர் சுவாதி பழங்குடி துணைக் குலமான லுக்மானி சர்க்கேலி குலத்தைச் சேர்ந்தவர்.[10] மேலும், ஆங்கிலம், உருது, பஷ்தூ மற்றும் தனது மூதாதையர் மொழியான இந்த்கோ ஆகிய நான்கு மொழிகளில் சரளமாக பேசுகிறார்.[11] இவரது குடும்பம் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மன்செராவிற்கு மேற்கே 15 கி. மீ. தொலைவில் உள்ள பஃபா நகரத்தைச் சேர்ந்தது.[12]  இவரது பெற்றோர் 1960 களின் பிற்பகுதியில் லிபியாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு இரேகம் 1973 இல் அஜ்தாபியா நகரில் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர்.[1]

இவர், கைபர்-பக்துன்வா மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பெசாவர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான அப்துல் ஹக்கீம் கானின் மருமகள் ஆவார்.[13]

பெசாவர், ஜின்னா மகளிர் கல்லூரியில் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.[14]

திருமணம்

இரேகம், எஜாஸ் ரகுமான் என்பவரை மணந்தார் ஆனால் 19 வயதிலேயே இவர்கள் பிரிந்தனர். பின்னர், ஒளிபரப்பு பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[15][16][17]

6 ஜனவரி 2015 அன்று, இம்ரான் கான் இவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இரேகாமுடன் தனது திருமணத்தை உறுதிப்படுத்தினார். இந்தத் திருமனம் ஒரு ஆண்டுக்குள்ளேயே மணமுறிவில் முடிந்தது.[5][18]

தொழில் வாழ்க்கை

இரேகம் 2006 ஆம் ஆண்டில் லீகல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். 2007 ஆம் ஆண்டில், சன்சைன் வானொலியில் நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.[19] 2008 ஆம் ஆண்டில், பிபிசியில் வானிலை தொகுப்பாளராக சேர்ந்தார்.

2013 ஆம் ஆண்டில், இரேகம் கான் பாக்கித்தானின் நியூஸ் ஒன் என்ற செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் ஆஜ் தொலைக்காட்சியில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டில், பாக்கித்தான் தொலைக்காட்சி நிறுவனத்தில் சிலகாலம் பணியாற்றிய பின்னர், டான் நியூஸ தொலைக்காட்சியில் இன் ஃபோகஸ் என்ற நடப்பு விவகார நிகழ்ச்சியை வழங்கினார்.

இரேகம், ஜனான் என்ற ஒரு பாக்கித்தான் திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். காதல் நகைச்சுவைத் திரைப்படமான, இது 13 செப்டம்பர் 2016 அன்று தியாகத் திருநாள் அன்று திரையிடப்பட்டது.[20]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Reham Khan: From Hazara to Bani Gala". 8 January 2015. http://tribune.com.pk/story/818700/reham-khan-from-hazara-to-bani-gala/. 
  2. "Imran Khan Marries Reham Khan Despite Opposition by Family". Express Tribune. 31 December 2015 இம் மூலத்தில் இருந்து 31 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141231194733/http://www.pakistantribune.com.pk/29003/imran-khan-marries-reham-khan-despite-opposition-family.html. 
  3. "Imran Khan Marries Reham Khan Despite Opposition by Family". Shafaqna. 31 December 2014 இம் மூலத்தில் இருந்து 9 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150109184458/http://en.newhub.shafaqna.com/PK/109038-Imran-Khan-Marries-Reham-Khan-Despite-Opposition-by-Family. 
  4. "Imran Khan 'secretly married BBC weather girl' despite concerns from family and political party about divorced mother". Mirror. 31 December 2014. https://www.mirror.co.uk/3am/celebrity-news/imran-khan-secretly-married-bbc-4897395. 
  5. 5.0 5.1 "Imran Khan, Reham divorce with mutual consent". Dawn. Pakistan. 30 October 2015. Retrieved 30 October 2015.
  6. Kokra, Sonali (26 August 2018). "Imran 'chose the wrong woman to mess with': Ex-wife Reham Khan on her tell-all memoir". thenational.ae. Archived from the original on 1 October 2019.
  7. Selby, Jenn (16 January 2015). "Reham Khan: Outrage in Pakistan as former BBC presenter who recently married Imran Khan is filmed cooking sausages". https://www.independent.co.uk/news/people/reham-khan-outrage-in-pakistan-as-former-bbc-presenter-who-recently-married-imran-khan-is-filmed-9982839.html. 
  8. "Reham Khan's book 'available in paperback in UK'". The News (Pakistan). 12 July 2018. Reham's book, published online today, has triggered debate on social media with many saying that she is doing all this on the behest of Pakistan Muslim League Nawaz to tarnish the image of Pakistan Tehreek-e-Insaf Chairman Imran Khan just before the July 25 polls.
  9. "Residents in Reham Khan's hometown celebrate her marriage". thenews.com.pk. 9 January 2015.
  10. "I am Pathan and I fear no one, says Reham on return to Pakistan". The Express Tribune. 3 December 2015. Retrieved 6 February 2016.
  11. "Reham Khan got linguistic talent". Samaa TV. Retrieved 6 February 2016.
  12. "Residents in Reham Khan's hometown". The News International. Retrieved 20 January 2016.
  13. "Reham Khan's father was doctor, uncle Hakeem was ex-governor, CJ". 9 January 2015. http://www.thenews.com.pk/Todays-News-7-294904-Reham-Khans-father-was-doctor-uncle-Hakeem-was-ex-governor-CJ. 
  14. CITS UoP. "University of Peshawar". University of Peshawar. Archived from the original on 21 March 2015. Retrieved 20 January 2016.
  15. Web Desk (15 July 2015). "The case of Reham Khan's 'fake' journalism degree". The Express Tribune News Network. Retrieved 15 July 2015.
  16. Web Desk (14 January 2015). "Exclusive: Reham's ex-husband responds to domestic abuse allegations". The Express Tribune News Network. Retrieved 28 January 2015.
  17. Murtaza Ali Shah (15 January 2015). "Reham's ex-husband rejects domestic violence charges". The News International. Retrieved 28 January 2015.
  18. "Imran, Reham divorce with mutual consent – The Express Tribune". The Express Tribune. 30 October 2015. Retrieved 30 October 2015.
  19. "Reham Khan on Awaztv". Archived from the original on 26 June 2015. Retrieved 20 February 2014.
  20. Sameen Hassan (14 May 2015). "Reham Khan's first production titled 'Janan' to release next year". தி எக்சுபிரசு திரிப்யூன். Retrieved 20 May 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=இரேகம்_கான்&oldid=283210" இலிருந்து மீள்விக்கப்பட்டது