இளமை வளையம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி மேன்மைப்படுத்துவது தமிழர்விக்கி:தொகுத்தல் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் [1] திருத்தி உதவுங்கள். |
கண் விழி வெண்படலத்தில் கொழுப்புப் பொருள் உட்பரவுதல் இளமை வளையம் எனப்படும்.[1]
இளமை வளையம் உருவாதல்
கண் விழி வெண்படலத்தில் கொழுப்புப் பொருள் உட்பரவுதலின் போது ஏறத்தாழ ஒரு மில்லி மீட்டர் அகலமுள்ள சாம்பல் வண்ணப் பிறை வடிவ வளைவுகளில் ஒன்று மேலும் மற்றொன்று கீமுமாகத் தோன்றிப் பக்கவாட்டில் இணைந்து கண் விழி வெண்படலத்திலிருந்து சற்றுத் தொலைவில் ஒரு வளையத்தை ஏற்படுத்தும். இவ்வளையத்திற்கும் கண் விழி வெண்படலத்திற்கும் இடையே நோயற்ற வெண்படலப் பகுதி இருக்கும்.
குறிப்பு
- இளமை வளையம் கண் அமைப்பையோ, பார்வையையோ பாதிப்பதில்லை.
- இது மிக அரிதாக தோன்றுகிறது.
- குழந்தைகளுக்கு ஏற்பட்டால் அதற்கு இளமை வளையம் என்றும் பெரியவர்களுக்கு ஏற்பட்டால் அதற்கு முதுமை வளையம் எனவும் பெயர்.
மேற்கோள்கள்
- ↑ "இளமை வளையம்". அறிவியல் களஞ்சியம் (ISBN: 81-7090-160-X) தொகுதி 5. (திருவள்ளுவர் ஆண்டு 2019, ஆடி - சூலை 1988). Ed. பேராசிாியர் கே. கே. அருணாசலம், அறிவியல் களஞ்சிய மையம், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 26. அணுகப்பட்டது 7 சூலை 2017.