எப்பிகொனைடீ
Jump to navigation
Jump to search
| எப்பிகொனைடீ | |
|---|---|
| எப்பிகோனசு பன்டியோனிசு (Epigonus pandionis) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | எப்பிகொனைடீ
|
| பேரினங்கள் | |
|
கட்டுரையில் பார்க்கவும். | |
எப்பிகொனைடீ (Epigonidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை சிறிய மீன்கள். இவற்றுள் பெரிய மீன்களைக் கொண்ட இனமான எப்பிகோனசு டெலெசுக்கோப்சு 75 சதம மீட்டர் நீளமாக வளரக்கூடியது. ஆனால், இக் குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலான மீனினங்கள் 20 சதம மீட்டருக்கு மேல் நீளமாக வளர்வதில்லை.
இவை மிதவெப்பவலய, வெப்பவலயக் கடல் பகுதிகளில் உலகம் முழுவதும் பரந்து காணப்படுகின்றன. கடல் தளத்துக்கு அண்மையில் வாழும் இம் மீனினங்கள் கடலில் 3,000 மீட்டர் ஆழம் வரையில் காணப்படுகின்றன.
வகைப்பாடு
இக் குடும்பத்தில் ஏழு பேரினங்களில் 34 இனங்கள் உள்ளன.
- பிரெஃபோசுட்டோமா (Brephostoma) பேரினம்.
- பிரிங்மானெலா (Brinkmannella) பேரினம்
- எப்பிகோனசு (Epigonus) பேரினம்
- புளோரன்சியேலா (Florenciella) பேரினம்
- மைக்குரோய்த்திசு (Microichthys) பேரினம்
- ரோசென்பிளாட்டியா (Rosenblattia) பேரினம்
- இஸ்ஃபிரீனொப்சு (Sphyraenops) பேரினம்
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)