கர்கோர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

கர்கோர் (Harkor) என்பவர் லோகன குலத்தின் குலதேவி ஆவார். இவர் தன் சகோதரர் ராணா ஜாஷ்ராஜுடன் சேர்ந்து லோகனர்களால் வழிபடப்படுகிறார்.[1] லோகனா (லோகரானா, தக்கர் மற்றும் பராய் என்றும் குறிப்பிடப்படுகிறது) வர்த்தகம் அல்லது வணிக இனக்குழு ஆகும். இக்குழுவினர் பெரும்பாலும் இந்தியாவிலும் பாக்கித்தானிலும் வாழ்ந்தனர்.[2][3]

நாட்டுப்புறக் கதைகளின்படி, லோகர்-கதா (இன்றைய இலாகூர்) அருகே 1205 மற்றும் 1231க்கு இடையில் வாழ்ந்தவர் ஜாஷ்ராஜ். இவர் தனது திருமணத்தின் திருமண மண்டபத்தில் மணமகனாக இருந்தபோது, இந்துக்களின் புனித விலங்கான பசுக்களை எதிரிகள் கவர்ந்து செல்வதாகக் கேள்விப்பட்டார். இதைக் கேட்டவுடன் தனது திருமண நிகழ்வினை விட்டு வெளியேறி, பசுக்களைக் காப்பாற்றுவதற்காகக் குழுவுடன் எதிரிகளைத் துரத்தினார். லோகனா பெண் போர்வீரர்களின் குழுவிற்குத் தலைமை தாங்கி அவரது சகோதரி கர்கோர் போபாருவும் எதிரிகளிடமிருந்து பசுக்களைக் காக்கும் போராட்டத்திலிருந்தார்.[1]

இந்தச் சண்டையில் காபூலைச் சேர்ந்த எதிரிகள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு ஜாஷ்ராஜ் வெற்றி பெற்றாலும், எதிரியின் தந்திரோபாயத்தின் விளைவாகக் கொல்லப்பட்டார். கர்கோரும் போரில் வீழ்ந்து, தியாகியானார். அன்றிலிருந்து இருவரும் முறையே லோகனாசு, பானுசாலிகளால் முறையே குலதேவன் மற்றும் குலதேவி என்று வணங்கப்பட்டு வருகின்றனர்.[4]

இவர் திருமணம் செய்து கொண்ட லோகனாசின் போபாரு கிளையினரால் இவர் குறிப்பாகக் குல தெய்வமாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்.[1]

மேலும் காண்க

  • இராணா வச்ராஜ்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "History - Fact has always been stranger than fiction". Archived from the original on 2013-09-10.
  2. Tapan Raychaudhuri; Dharma Kumar; Irfan Habib; Meghnad Desai (1983). The Cambridge Economic History of India: Volume 2, C.1757-c.1970. CUP Archive. pp. 340–. ISBN 978-0-521-22802-2.
  3. Yasir Suleiman (21 April 2010). Living Islamic History: Studies in Honour of Professor Carole Hillenbrand. Edinburgh University Press. pp. 58–. ISBN 978-0-7486-4219-9.
  4. Lohanas in Diaspora
"https://tamilar.wiki/w/index.php?title=கர்கோர்&oldid=317611" இலிருந்து மீள்விக்கப்பட்டது