கீத்திசேனன்
Jump to navigation
Jump to search
கீத்திசேனன் (பொ.பி. 524) இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஐந்தாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் நான்காமானவனும் தன் தந்தையுமான குமார தாதுசேனன் இறந்த பிறகு ஆட்சிக்கட்டிலில் ஏறினான். இவனுடைய ஆட்சிக்காலத்தின் 9ஆம் மாதத்தில் இவனுடைய தாய்மாமனான சிவ மௌரியன் என்பவன் இவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான்.[1]
மேற்கோள்கள்
- ↑ சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 4
மூலநூல்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்