குடமுழா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குடமுழா (ஐம்முக முழவம்)

குடமுழா என்பது ஒரு பஞ்சமுக வாத்தியமாகும்.

வரலாறு

முப்பது வகையான தோற்கருவிகள் தமிழர் வாழ்வோடு இணைந்திருந்தன. அவற்றில் குடமுழவம் எனப்படும் குடமுழா மங்கலக் கருவியாகும். சங்க நூல் மட்டுமல்லாமல் அண்மையில் வெளியான நூல்களிலும்கூட குடமுழவம் பற்றிய குறிப்புகள் உள்ளன. [1]

இசைக்கருவி, தாளக்கருவி

தொன்மையில் தமிழர்களின் இல்லங்களில் நிகழ்ந்த மங்கல நிகழ்ச்சிகளில் குடமுழா இருந்தது என்பதற்கும், இது யாழொடும், குழலொடும் இணைந்து ஒலித்தது என்பதற்கும் குறிப்புகள் உள்ளன. மங்கலக்கருவியாக இருந்த இது பின்னர் ஆடலுக்குரிய தாளக்கருவியாக ஆனது.[1]

வளர்ச்சி

இந்தியாவின் பல்வேறு கலை மரபுகளிலும் ஒரு வாயுடைய குடமுழவம் இடம் பெற்றிருந்தாலும், தமிழகத்தில் குறிப்பாகச் சோழ மண்டலத்தில் இக்கருவி பஞ்சமுக முழவமாக வளர்ச்சியடைந்தது. இன்றும் இம்மண்டலத்தின் ஏதோ ஒரு மூலையில் (திருவாரூரில்) இசைக்கப்பெற்று வாழ்ந்துகொண்டும் இருக்கிறது.[1]

மேலும் பார்க்க

இவையையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 குடவாயில் பாலசுப்ரமணியன், குடமுழா, அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 1997

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குடமுழா&oldid=332127" இலிருந்து மீள்விக்கப்பட்டது