கூக்கபரா
Jump to navigation
Jump to search
| கூக்கபரா | |
|---|---|
| ஆத்திரேலியா, தாசுமேனியாயாவில் சிரிக்கும் கூக்கபுர்ரா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | Halcyonidae
|
| பேரினம்: | Dacelo வில்லியம் லீச், 1815
|
கூக்கபரா (Kookaburra) என்பது ஆத்திரேலியாவின் தென்பகுதியிலுள்ள காடுகளில் காணப்படும் ஒரு வகைப் பறவை. இவை எழுப்பும் மிகுந்த ஒலிக்காக இவை பெயர்பெற்றவை. இவை பொழுது விடியும் போதும் இறங்கும் போதும் ஒலி எழுப்பும். மரப்பொந்துகளில் வசிக்கின்றன. மீன்கள், சிறு பாலூட்டிகள், தவளைகள், பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன. பூச்சிகளை இவை விரும்பி உண்கின்றன.
ஒன்று முதல் நான்கு முட்டைகளை வசந்த காலத்தில் இடுகின்றன. ஆண் பறவையே கூட்டைப் பாதுகாக்கும். கூக்கபர்ரா குஞ்சுகள் நான்கு ஆண்டுகள் வரை பெற்றோருடன் இருக்கும்.