கோதை மார்பன்
Jump to navigation
Jump to search
கோதை மார்பன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். கிள்ளிவளவன் என்னும் சோழ அரசன், பழையன் மாறன் என்னும் பாண்டியனை வென்று அவனது படையிலிருந்த குதிரைகளையும், யானைகளையும் கைப்பற்றிக்கொண்டபோது, இந்தச் சேரன் மகிழ்ச்சியில் திளைத்தான். [1]
அடிக்குறிப்பு
- ↑
நெடுந் தேர்,
இழை அணி யானைப் பழையன் மாறன்,
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்,
வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த
கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்,
கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி,
ஏதில் மன்னர் ஊர் கொள,
கோதை மார்பன் உவகையின் பெரிதே. (அகநானூறு 345)