சங்க்கு ஆறு
| சங்க்கு ஆறு Sankh River | |
|---|---|
| படிமம்:Shankh River.jpg சங்க்கு ஆறு | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சார்க்கண்டு, சத்தீசுகர், ஒடிசா |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | உலுப்புங்பட் கிராமம் |
| • அமைவு | கும்லா மாவட்டம், சார்க்கண்டு |
| • ஆள்கூறுகள் | 23°14′N 84°16′E / 23.233°N 84.267°E |
| • ஏற்றம் | 1,000 m (3,300 அடி) |
| முகத்துவாரம் | கோயல் நதியுடன் சங்கமித்து பிராம்மணி நதியை உருவாக்குகிறது |
| நீளம் | 240 km (150 mi) |
சங்க்கு ஆறு (Sankh River) இந்தியாவின் சத்தீசுகர், சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்களில் பாயும் ஓர் ஆறாகும். ஒடிசாவில் உள்ள கோயல் ஆற்றைச் சந்திப்பதற்கு முன்பு 240 கிலோமீட்டர் (150 மைல்) நீளத்திற்குப் பாய்கிறது.
ஆற்றின் பாதை
சங்க்கு ஆறு சார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் உள்ள உலுபுங்பட்டு கிராமத்தில் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் (3,300 அடி) உயரத்தில் தொடங்கி சத்தீசுகரில் நுழைவதற்கு முன்பு மாநிலத்தில் 67.5 கிலோமீட்டர் (41.9 மைல்) பாய்கிறது. பின்னர் சத்தீசுகரில் சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்) தூரம் ஓடி சார்க்கண்டில் நுழைகிறது. அங்கு இது மேலும் 78 கிலோமீட்டர் (48 மைல்) தூரம் பாய்கிறது. இறுதியாக ஒடிசாவில் நுழைந்து மேலும் 45 கிலோமீட்டர் (28 மைல்) பயணித்து கோயலுடன் இணைகிறது.[1] தெற்கு கோயல் ஒடிசாவில் நுழைந்து ரூர்கேலாவிற்கு அருகிலுள்ள வேதவியாசில் சங்க்கு நதியில் இணைகிறது. அங்கிருந்து அது பிராம்மணி என்று அழைக்கப்படுகிறது (பார்க்க 22°14′45″வடக்கு 84°47′02″கிழக்கு).[2]
சத்னி அருவி
இராஞ்சி பீடபூமியின் விளிம்பில் சங்க்கு நதியில் உள்ள 60 மீட்டர் (200 அடி) உயரமுள்ள சத்னி அருவி, செங்குத்துச்சரிவு அருவிக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.[3]
மேற்கோள்கள்
- ↑ Hydrology and Water Resources of India by Sharad K. Jain, Pushpendra K. Agarwal, Vijay P
- ↑ "Initiatives & Activities IRN-ORISSA". IRN – Kerala. Retrieved 2010-04-20.
- ↑ K. Bharatdwaj (2008). Physical Geography: Hydrosphere. Discovery Publishing Pvt. Ltd. p. 161. ISBN 9788183561679.