சரளா ராய்
Jump to navigation
Jump to search
| சரளா ராய் | |
|---|---|
| பிறப்பு | 26 நவம்பர் 1859 கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 29 June 1946 (aged 86) |
| பணி | சமூகப் பணியாளர் |
| வாழ்க்கைத் துணை | பிரசன்ன குமார் ராய் |
சரளா ராய் (Sarala Roy) (வங்காளம்: সরলা রায় சோரொலா ரே) ஒரு கல்வியாளரும் சமூகப் பணியாளரும் ஆவார். இவர் கொல்கத்தாவில் உள்ள கோகலே நினைவுப் பள்ளியை நிறுவியதால் பெயர்பெற்றவர்.
வாழ்க்கை
இவர் பிரம்மஞானச் சீர்திருத்தவாதியாகிய துர்கா மோகன் தாஸின் மகளாவார். இவர் சதீஷ் ரஞ்சன் தாஸ், அபலா போஸ், சைலா பாலா தாசு ஆகியோரின் தங்கையாவார். இவர் சித்தரஞ்சன் தாஸ், இந்தியத் தலைமை நீதிபதியாகிய சுதி ரஞ்சன் தாஸ் ஆகியோரின் ஒன்றுவிட்ட தங்கையாவார். இப்போது வங்க தேசத்தில் அமைந்துள்ள டாக்கா நகரத் தெலிர்பாகு குசும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கொல்கத்தா மாநிலக் கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகிய பிரசன்ன குமார் ராய் என்பவரை மணந்தார்.[1]
கல்வியாளர்
அனைத்திந்திய மகளிர் கருத்தரங்கம்
மேற்கோள்கள்
- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (வங்காள மொழியில்), p23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0