சிலாகாலன்
Jump to navigation
Jump to search
சிலாகாலன் (பொ.பி. 526 - 539) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் எட்டாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் ஏழாமானவனும் தன் மாமனுனான மூன்றாம் உபதிச்சன் என்பவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான்.[1] இவனுடைய மூத்த மகனான இரண்டாம் மொக்கல்லானன் என்பவனை கிழக்கிலங்கை நாடுகளுக்கும், இரண்டாம் மகனான தாட்டாபூபதி என்பவனை இலங்கையின் மலைய நாட்டிற்கும், மூன்றாம் மகனான உபதிச்சனை தன் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும், தன் அமைச்சனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனுமான மகாநாகன் என்பவ்னை உராகணம் நாட்டிற்கும் அதிபதிகள் ஆக்கினான்.[2] இவனுக்குப் பிறகு இவனுடைய 2ஆம் மகனான தாட்டாபூபதி இரண்டாம் மொக்கல்லானனுக்கு சேர வேண்டிய ஆட்சியை பறித்துக் கொண்டு இலங்கையை அரசாண்டான்.
மேற்கோள்கள்
- ↑ சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 5-6
- ↑ சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 26-89
மூலநூல்
- களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்), நாம் தமிழர் பதிப்பகம், மயிலை சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.
- சூல வம்சம்