சிவானந்தர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சிவானந்த சரசுவதி
Sivananda Saraswati
படிமம்:Swami Shivananda Liebe.jpg
பிறப்பு(1887-09-08)8 செப்டம்பர் 1887
பத்தமடை, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு14 July 1963(1963-07-14) (aged 75)
சிவானந்தநகர்
இயற்பெயர்குப்புசாமி
தேசியம்இந்தியர்
சமயம்இந்து சமயம்
நிறுவனர்தெய்வ நெறிக் கழகம்
குருவிசுவானந்த சரசுவதி

சிவானந்த சரசுவதி (Sivananda Saraswati) அல்லது சுவாமி சிவானந்தர் (Swami Sivananda); 8 செப்டம்பர் 1887 – 14 சூலை 1963) ரிசிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்.

மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திருப்பிக் கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மிக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துகளைச் சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும், மற்றும் சுற்றுபயணங்கள் மூலமாகவும் பரப்பினார்.[1][2][3]

சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக் கழகம், சுவாமி விட்டுச் சென்ற ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது.

மேற்கோள்கள்

  1. Divine Life Society Britannica.com
  2. Divine Life Society Divine enterprise: Gurus and the Hindu Nationalist Movement, by Lise McKean. University of Chicago Press, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-56009-0. Page 164=165.
  3. Swami Shivananda Religion and anthropology: a critical introduction, by Brian Morris. Cambridge University Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-85241-2. Page 144.

வெளி இணைப்புகள்

தெய்வ நெறி கழகம்

"https://tamilar.wiki/w/index.php?title=சிவானந்தர்&oldid=362989" இலிருந்து மீள்விக்கப்பட்டது