ஆள்கூறுகள்: 10°59′26″N 76°28′12″E / 10.99056°N 76.47000°E / 10.99056; 76.47000

சூரியோடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சூரியோடு

சிற்றூர்
Chooriyode
Chooriyode is located in கேரளம்
Chooriyode
Chooriyode
ஆள்கூறுகள்: 10°59′26″N 76°28′12″E / 10.99056°N 76.47000°E / 10.99056; 76.47000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
வட்டம்மண்ணார்காடு
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சூரியோடு (Chooriyode) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இது மண்ணார்க்காடு வட்டத்துக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைமையகமான பாலக்காட்டின் வடகிழக்கே 35 கி. மீ. தொலைவில், கோழிக்கோடு செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை 213 (NH-213) மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அமைதிப் பள்ளத்தாக்கு (50 மில்லியன் ஆண்டுகளின் அறுபடாத பரிணாம வரலாற்றைக் கொண்ட வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடு) சூரியோடில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

கேரளத்தின் மண்ணார்காட்டில் இருந்து சூரியக்கோடு 7 கி. மீ. தொலைவில் உள்ளது. சிறு நகரமான தச்சம்பாறை மற்றும் சிரக்கல் பாடி, கஞ்சிரபுழா அணை, பூங்கா ஆகியவை சூரியோடு சந்திப்பில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளன.

ஊரைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கவர்கள்

மாநில அளவிலான பள்ளி மாணவர் நடன இயக்குநர்- அப்பு மேஷ்

குடிமைப் பொறியாளர் கட்டடக் கலைஞர் - நௌஷாத் கே

சமயங்கள்

இங்கு பெரும்பாலும் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ சமயத்தவர்கள் இருக்கின்றனர்.

ஆறு

இங்கு பாயும் சூரியோடு ஆறு பாரதப்புழாவின் துணை ஆறாகும். கேரளத்தில் மேற்கே பாயும் ஆறுகளில் மிகப்பெரிய துணை ஆறான சூரியோடு ஆற்றின் மீன்களின் பன்முகத்தன்மை பற்றிய விரிவான ஆய்வில், சூரியோடு ஆற்றானது மீன் இனங்கள் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டது. இதில் 117 இனங்கள் இருப்பது பதிவு செய்ப்பட்டது. அதில் மூன்று இனங்கள் இந்த ஆற்றுக்கேச் சொந்தமான அகணிய உயிரி ஆகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சூரியோடு&oldid=370630" இலிருந்து மீள்விக்கப்பட்டது