சூர்ய மல்லர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சூர்ய மல்லர்
காந்திபூரின் அரசன்
ஆட்சிக்காலம்1520-1530
முன்னையவர்இரத்ன மல்லர்
பின்னையவர்அமர மல்லன்
பிறப்புநேபாளம்
இறப்பு1530
நேபாளம்
அரசமரபுமல்லர் வம்சம்
தந்தைஇரத்ன மல்லர்

சூர்ய மல்லர்' (Surya Malla) மல்லர் வம்சத்தின் மன்னரான இவர் காந்திபூரின் இரண்டாவது மன்னராகவும் இருந்தார். இவர் தனது தந்தை இரத்ன மல்லருக்குப் பிறகு 1520 முதல் 1530 வரை ஆட்சி செய்தார்.[1]

ஆட்சி

நேபாளத்தின் வம்சாவளி மற்றும் பத்மகிரியின் வம்சாவளி ஆகியவற்றின் படி, இவர் காத்மாண்டு சமவெளியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு பழங்கால நெவார் நகரமான சங்குவைக் கைப்பற்றி அதைத் தனது தலைநகராக மாற்றினார்.[2] 1526இல், பால்ப இராச்சியத்தைச் சேர்ந்த முகுந்தா சென் காத்மாண்டு சமவெளி முழுவதையும் தாக்கினார். ஒரு காலத்தில் காந்திபூர் மற்றும் இலலித்பூர் இரண்டையும் சுற்றி வளைத்தார்.

சூர்ய மல்லர் 1530இல் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் அமர மல்லன் ஆட்சிக்கு வந்தார்.[3]

மேற்கோள்கள்

  1. Siddika, Shamima (1993). Muslims of Nepal. Kathmandu: Gazala Siddika.
  2. Shrestha, Bal Gopal (2012). The Sacred Town of Sankhu: The anthropology of Newar Ritual, Religion and Society in Nepal. Newcastle upon Tyne: Cambridge Scholars. p. 57. ISBN 9781443838252.
  3. Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF). University of Cambridge. p. 61.
"https://tamilar.wiki/w/index.php?title=சூர்ய_மல்லர்&oldid=370657" இலிருந்து மீள்விக்கப்பட்டது