ஜாய் ஆடம்சன்
| ஜாய் ஆடம்சன் | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
எல்சா சிங்கத்துடன் ஆடம்சன், இலையுதிர் காலம் 1960[1] | |||||||||
| பிறப்பு | பிரீடெரிக் விக்டோரியா கெஸ்னர் 20 சனவரி 1910 திரோப்பாவ், ஆஸ்திரிய சிலேசியா, ஆத்திரியா-அங்கேரி (தற்போதைய ஓபவா, செக் குடியரசு) | ||||||||
| இறப்பு | 3 January 1980 (aged 69) ஷாபா தேசிய சரணாலயம், கென்யா | ||||||||
| இறப்பிற்கான காரணம் | கொலை | ||||||||
| கல்லறை | மேரு தேசிய பூங்கா | ||||||||
| பணி |
| ||||||||
| வாழ்க்கைத் துணை |
| ||||||||
ஜாய் ஆடம்சன்
| |||||||||
பிரீடெரிக் விக்டோரியா " ஜாய் " ஆடம்சன் (Friederike Victoria "Joy" Adamson ; 20 சனவரி 1910 - 3 சனவரி 1980) என்பவர் ஒரு இயற்கை ஆர்வலர், ஓவியர், எழுத்தாளர் ஆவார். இவரது பார்ன் ஃப்ரீ என்ற புத்தகமானது எல்சா என்ற சிங்கக் குட்டியை வளர்ப்பதில் இவர் பெற்ற அனுபவங்களை விவரிக்கிறது. பார்ன் ஃப்ரீ நூல் பல மொழிகளில் மொழிபெயற்கப்பட்டு வெளியானது. மேலும் அதே பெயரில் திரைப்படமாக்கபட்டு அகாதமி விருது பெற்றது. 1977 ஆம் ஆண்டில், இவருக்கு அறிவியல் மற்றும் கலைக்கான ஆத்திரிய கிராஸ் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது.[2]
வாழ்க்கை வரலாறு
ஆடம்சன், ஆத்திரியா-அங்கேரியின் சிலேசியாவின் டிராப்பாவில் [3] (தற்போதய ஓபாவா, செக் குடியரசு ) விக்டர் மற்றும் திரூட் கெஸ்னர் ஆகியோரின் மூன்று மகள்களில் இரண்டாவது மகளாகப் பிறந்தார். இவரின் 10 வயதில் இவருடைய பெற்றோர் விவாகரத்து செய்தனர். பின்னர் இவர் வியன்னாவில் உள்ள தன் பாட்டியுடன் வசிக்கச் சென்றார். தனது சுயசரிதையான தி சர்ச்சிங் ஸ்பிரிட்டில், ஆடம்சன் தன் பாட்டியைப் பற்றி எழுதுகையில், "என்னில் இருக்கும் நல்லதன எல்லாவற்றிற்கும் நான் அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன்" என்று கூறினார்.[சான்று தேவை]
இவர் குரூஸ்பெர்க் (இப்போது குரூஸ்பெர்க், செக் குடியரசு ) என்ற கிராமத்தில் உள்ள ஓபாவா அருகே ஒரு தோட்டத்தில் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், இவர் வியன்னாவுக்குச் சென்று இசைப் பட்டம் பெற்றார். பின்னர் சிற்பம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றைப் பயின்றார். இளம் வயதிலேயே, ஆடம்சன் பியானோ இசைக் கலைஞராகவும், மருத்துவத் துறையிலும் தனது வாழ்க்கையை செலவிட விரும்பினார்.[4]
ஜாய் ஆடம்சன் பத்தாண்டு காலக்கட்டத்ததில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். 1935 ஆம் ஆண்டு இவரது முதல் திருமணம் விக்டர் வான் கிளார்வில் (சீபெல் என்றும் அழைக்கப்படுகிறார்; 1902–1985) உடன் நடந்தது. [5]
1937 இல் இவர் கென்யாவுக்குச் சென்றார். அங்கு 1938 ஆம் ஆண்டு தாவரவியலாளர் பீட்டர் பாலியைச் சந்தித்து திருமணம் செய்துகொண்டார். அவர்தான் இவருக்கு "ஜாய்" என்ற செல்லப்பெயரைக் கொடுத்தார். பீட்டர் தாவரவியல் ஓவியங்களை வரைந்தார், மேலும் அவர்தான் இவரைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து வரைந்து வரையச் சொல்லி ஊக்குவித்தார். 1940 களின் முற்பகுதியில் சஃபாரியில் இருந்தபோது தன் மூன்றாவது கணவரான மூத்த வனவிலங்கு வார்டன் ஜார்ஜ் ஆடம்சனை சந்தித்து 1944 இல் அவரை மணந்தார். அவர்கள் கென்யாவில் ஒன்றாக தங்கள் வீட்டைக் கட்டினர்.[3]
ஜாய் ஆடம்சன், எல்சா தி லயனசுடன் தொடர்புடைய தனது பாதுகாப்பு முயற்சிகளுக்காக மிகவும் பிரபலமானவர். 1956 ஆம் ஆண்டில், கென்யாவின் வடக்கு எல்லைப்புற மாவட்டத்தின் விளையாட்டு வார்டனாக ஜார்ஜ் ஆடம்சன் தனது பணியின்போது, ஒரு பெண் சிங்கம் அவரையும் மற்றொரு வார்டனையும் தாக்க முயன்றபோது சுட்டுக் கொன்றார். பின்னர்தான், அது ஒரு தாய் சிங்கம், தன் மூன்று குட்டிகளைக் காக்கவே தங்கள் மீது பாய்ந்தது என்பதை ஜார்ஜ் உணர்ந்தார். அதன் குட்டிகள் ஒரு பாறை இடுக்கின் அருகிலே காணப்பட்டன. தாயை இழந்த அந்த மூன்றுக் குட்டிகளையும் தன் வீட்டிற்கு எடுத்துவந்து ஜாயும், ஜார்ஜும் குட்டிகளை அக்கறையோடு கவனித்துக் கொண்டனர். சில மாதங்களில் மூன்று குட்டிகளையும் கவனித்துக்கொள்வது கடினமாக இருந்தது. அதனால் "பிக் ஒன்", "லஸ்டிகா" என்று அழைக்கப்பட்ட வலிமையான இரண்டு குட்டிகளை, ரோட்டர்டாமில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவிட்டனர். சிறிது நோஞ்சானான "எல்சா" என்ற குட்டியை மட்டும் வீட்டிலேயே தம்பதியினர் வளர்த்தனர்.[சான்று தேவை]
தங்களுடன் எல்சாவை வைத்து வளர்த்தாலும் அது வளர்ந்த பிறகு அதை விலங்கு காட்சி சாலைக்கு அனுப்புவதற்கு பதில் காட்டில்தான் விடவேண்டும் என்று ஆடம்சன்ஸ் இணையர் முடிவு செய்தனர். அதனால் அந்தச் சிங்கக் குட்டிக்கு வேட்டையாடவும், தனியாக வாழவும் பல மாதங்கள் பயிற்சி அளித்தனர். இறுதியில் அவர்கள் அதில் வெற்றி பெற்றனர். எல்சா வெற்றிகரமாக காட்டுக்குள் விடுவிக்கப்பட்ட முதல் வளர்ப்பு பெண் சிங்கமாகவும், விடுவிக்கப்பட்ட பிறகும் வளர்த்தவர்களை காணும்போது அன்புடன் பழகிய சிங்கமாகவும், வளர்த்த பின்னர் காட்டில் விடுவிக்கப்பட்ட பிறகு குட்டிகளை ஈன்ற முதல் சிங்கமாகவும் அறியப்பட்டது. ஆடம்சன்ஸ் குடும்பத்தினர் குட்டிகளிடமிருந்து தொலைவைப் பராமரித்தனர். அதே சமயம் அவற்றை ஒளிப்படம் எடுக்கும் அளவுக்கு நெருக்கமாகவும் இருந்தனர்.[சான்று தேவை]
1961 சனவரியில், எல்சா உண்ணி கடியால் ஏற்பட்ட பேபிசியோசிஸ் என்ற நோயால் இறந்தது. இதனால் ஜாயும், ஜார்ஜும் துயரத்தில் ஆழ்ந்தனர். எல்சாவைப் புதைத்துவிட்டு, தங்களையும் எல்சாவிற்கு பக்கத்திலேயே புதைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தாயை இழந்த அதன் மூன்று குட்டிகளும் ஒரு தொந்தரவாக மாறி, உள்ளூர் விவசாயிகளின் கால்நடைகளைக் கொன்றன. விவசாயிகள் குட்டிகளைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய ஆடம்சன்கள், இறுதியில் அவற்றைப் பிடித்து அண்டை நாடான தாங்கன்யிகா பிரதேசத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவற்றிற்கு செரெங்கெட்டி தேசியப் பூங்காவில் வாழிடம் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
எல்சா வாழும்வரை, அதற்கு காட்டு வழ்கை போன்றவற்றைக் கற்பித்து, கண்காணித்து வர ஜாயும், ஜார்ஜ் ஆடம்சனும் ஒருவருக்கொருவர் தேவைப்பட்டனர். ஆனால் அது இறந்து அதனுடைய குட்டிகள் தேசிய பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு. அவர்களின் ஆர்வங்கள் தனித்தனி திசைகளில் சென்றன, அவர்களின் வாழ்க்கையும் அப்படித்தான் சென்றன. இருவரும் விவாகரத்தையோ அல்லது சட்டப்பூர்வ பிரிவையோ விரும்பவில்லை என்றாலும், அவர்களின் முரண்பட்ட நோக்கங்கள் (ஜார்ஜ் சிங்கங்களுடனும், ஜாய் சிறுத்தைகளுடனும் தொடர்ந்து பணியாற்ற விரும்பினர்) அவர்கள் பிரிந்து வாழும் சூழலுக்கு கொண்டுவந்தது (சில சமயங்களில் மீண்டும் ஒன்றாக வாழ்வது பற்றி விவாதித்தாலும், அவர்கள் மீண்டும் அதை விரும்பவில்லை). அவர்கள் ஒவ்வொரு கிறிஸ்துமசையும் ஒன்றாகக் கொண்டாடினர், அவர்கள் நல்ல உறவில் இருந்தனர்.[சான்று தேவை]
ஜாய் தனது சொந்த குறிப்புகள் மற்றும் ஜார்ஜின் நாட்குறிப்புகளைப் பயன்படுத்தி, சிங்கத்தின் கதையைச் சொல்ல பார்ன் ஃப்ரீ என்னும் நூலை எழுதினார். அதை பல வெளியீட்டாளர்களிடம் தந்தார். இறுதியில் ஹார்பர்காலின்ஸின் ஒரு பகுதியான ஹார்வில் பிரஸ் அதை வாங்கி வெளியிட ஒப்புக் கொண்டது. 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நூல் நன்கு விற்பனையானது. தி நியூயார்க் டைம்சின் சிறந்த விற்பனை நூல் பட்டியலில் 13 வாரங்கள் முதலிடத்திலும், ஒட்டுமொத்தமாக தரவரிசையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டும் இருந்தது. [6] இந்தப் புத்தகத்தின் வெற்றிக்கு எல்சாவின் கதையும், அச்சிங்கத்தினுடைய டசன் கணக்கான ஒளிப்படங்களும் காரணமாகும். எல்சா காட்டில் விடுவிக்கப்படுவதற்கு முந்தைய அதன் வாழ்க்கையின் பல நிகழ்வுகளின் படங்கள் வாசகர்களுக்கு இதில் இடம்பெற்றிருந்தது. அடுத்தடுத்த புத்தகங்களும் கூடுதலான விளக்கப்படங்களுடன் இருந்தன. பார்ன் ஃப்ரீ விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஆடம்சன் புத்தகத்தை விளம்பரப்படுத்த வெளியீட்டாளர்களுடன் சேர்ந்து பணியாற்றினார். இதனால் ஆடம்சன்சன் சர்வதேச அளவில் பிரபலமானார்.
பார்ன் ஃப்ரீ நூலினால் அடைந்த பிரபலத்தால், இவர் தனது வாழ்நாள் முழுவதும் வனவிலங்குகள் பாதுகாப்புக்காக பணம் திரட்டுவதில் கழித்தார். இந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து, எல்சா அதன் குட்டிகளுக்குத் தாயாக இருந்ததைப் பற்றிய லிவிங் ஃப்ரீ மற்றும் சிங்கக் குட்டிகளான ஜெஸ்பா, கோபா, லிட்டில் எல்சா ஆகியவை காட்டில் விடுவிக்கபட்டதைப் பற்றிச் சொல்லும் ஃபாரெவர் ஃப்ரீ ஆகியவை வெளியிடப்பட்டன. ஆடம்சன் பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களுடன் புத்தகத் தொடர்ச்சியில் ஈடுபட்டார். [3]
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் ஆடம்சன்சின் நோக்கத்தை வெளிச்சமிட்டாலும், ஆடம்சன் தனது கடைசி 10 ஆண்டுகளை உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, ஆப்பிரிக்காவில் வனவிலங்குகள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து உரைகளை நிகழ்த்தினார். [7]
ஜாய் ஆடம்சனஸ் ஆப்பிரிக்கா, என்ற இவரது ஓவியங்கள் அடங்கிய புத்தகம் 1972 இல் வெளியிடப்பட்டது. இவர் ஒரு சிவிங்கிப்புலிக்கு ஒரு ஆப்பிரிக்க சிறுத்தைக்கும் மறுவாழ்வு அளித்தார். பிப்பா என்ற செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட சிவிங்கிப்புலி, இயற்கை வனத்தில் விடுவிக்க தயார்ப்படுத்த, ஏழு மாத வயதில் ஆடம்சனிடம் கொடுக்கப்பட்டது. பிப்பா இறப்பதற்கு முன்பு நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்தது. ஆடம்சன் பிப்பா மற்றும் அதன் சிவிங்கிப்புலி குடும்பத்தைப் பற்றி தி ஸ்பாட்டட் ஸ்பிங்க்ஸ் மற்றும் பிப்பாஸ் சேலஞ்ச் ஆகிய நூல்களை எழுதினார். பின்னர், ஆடம்சன் இதேபோல ஒரு ஆப்பிரிக்க சிறுத்தை குட்டியைப் பெற்றபோது, பல வருடங்களில் தனது இலக்கை அடைந்தார். 1976 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஆடம்சனின் ஒரு வனத்துறை நண்பர் பென்னி என்னும் சிறுத்தைக் குடியைக் கண்டுபிடித்தபோது அதற்கு எட்டு வார வயது. ஆடம்சனின் மரணத்திற்குப் பிந்தைய மற்றும் இறுதிப் புத்தகமான ஷாபா ராணி வெளியிடப்படுவதற்கு முன்பு பென்னிக்கு இரண்டு குட்டிகள் இருந்தன.[சான்று தேவை]
தனது வாழ்நாளில், இவர் 500க்கும் மேற்பட்ட ஓவியங்களையும் கோட்டோவியங்களையும் வரைந்தார். கென்யா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்களின் உருவப்படங்களும், கிழக்கு ஆப்பிரிக்க தாவரங்கள் பற்றிய குறைந்தது ஏழு புத்தகங்களுக்கான தாவரவியல் விளக்கப்படங்களும் இவரது படைப்புகளில் அடங்கும். இவர் விலங்குகள் குறித்த ஓவியங்களையும் வரைந்தார், அவற்றில் எல்சா மற்றும் பிப்பா பற்றிய ஆய்வுகள் அடங்கும். [8] [9] [10]
கொலை மற்றும் மரபு
1980 சனவரி 3 அன்று, கென்யாவின் ஷாபா தேசியப் பூங்காவில், ஜாய் ஆடம்சனின் உடலை அவரது உதவியாளர் பீட்டர் மவ்சன் கண்டுபிடித்தார். இவரை ஒரு சிங்கம் கொன்றுவிட்டதாக அவர் தவறாகக் கருதினார். இதுவே துவக்கத்தில் ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டது. இவர் இறந்தபோது இவருடைய 70வது பிறந்தநாளுக்கு இன்னும் சில வாரங்களே இருந்தன.[11]
காவல்துறை விசாரணையில் ஆடம்சனின் உடலில் இருந்த காயங்கள் விலங்குகள் தாக்கி கொல்லபட்டதற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை என்று கண்டறியப்பட்டது. கடுமையான ஆயுதத்தால் ஆடம்ஸ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் முடிவு செய்தனர்.[12] ஆடம்சனால் முன்னர் பணிக்கு வைக்கபட்டு, பணி நீக்கம் செய்யபட்ட பால் நக்வாரே எகாய் என்பவன் கொலைக் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு காலவரையற்ற தண்டனை விதிக்கப்பட்டது. குற்றம் நடந்தபோது அவன் சிறுவனாக இருந்திருக்கலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்ததால் அவன் மரணதண்டனையிலிருந்து தப்பினான். [13] [14]
ஜாய் ஆடம்சன் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் அவரது சாம்பல் கென்யாவின் மேருவில் உள்ள மேரு தேசிய பூங்காவில் எல்சா சிங்கம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1989 ஆம் ஆண்டு, கோரா தேசிய பூங்காவில் உள்ள தனது முகாமுக்கு அருகில், வேட்டைக்காரர்களால் தாக்கப்பட்ட ஒரு சுற்றுலாப் பயணிக்கு உதவ விரைந்த போது ஜார்ஜ் ஆடம்சன் கொல்லப்பட்டார். சுற்றுலாப் பயணியின் உயிரைக் காப்பாற்ற உயிரைக் கொடுத்தார்.[15]
ஜாய் ஆடம்சனின் பெரிய பூனைகள் பற்றிய புத்தகங்களுக்கு மேலதிகமாக, அவரது கலைப்படைப்புகள் அடங்கிய ஒரு புத்தகமான தி சர்ச்சிங் ஸ்பிரிட் என்ற பெயரிலான சுயசரிதை வெளியிடப்பட்டது. ஜார்ஜ் ஆடம்சனின் இரண்டாவது சுயசரிதை, மை பிரைட் அண்ட் ஜாய், 1986 இல் வெளியானது.
நூல் பட்டியல்
ஜாய் ஆடம்சனின் புத்தகங்கள்
- Born Free (1960) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56849-551-X
- Elsa: The Story of a Lioness (1961)
- Living Free: The story of Elsa and her cubs (1961) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-637588-X
- Forever Free: Elsa's Pride (1962) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-632885-7
- The Spotted Sphinx (1969) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-184795-9
- Pippa: The Cheetah and her Cubs (1970) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-262125-3
- Joy Adamson's Africa (1972) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-146480-4
- Pippa's Challenge (1972) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-171980-2
- Peoples of Kenya (1975) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-171681-1
- The Searching Spirit: Joy Adamson's Autobiography. Ulverscroft Large Print Books. 1 July 1982. ISBN 978-0-7089-0826-6. கணினி நூலகம் 4493290.; also, (1978) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-216035-8
- Queen of Shaba: The Story of an African Leopard (1980) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-272617-3
- Friends from the Forest (1980) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-133645-8
ஓவியராக மட்டும்
- Gardening in East Africa, II edition[16]
- At least six other books depicting the flowers, trees, and shrubs of East Africa[16]
ஜார்ஜ் ஆடம்சன் எழுதிய புத்தகங்கள்
- A Lifetime With Lions. (Autobiography). Doubleday,1968. ASIN: B0006BQAZW
- Bwana Game: The Life Story of George Adamson, Collins & Harvill (April 1969), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-261051-3
- My Pride and Joy. (Autobiography). Simon and Schuster. 1987. ISBN 978-0-671-62497-2. கணினி நூலகம் 14586464.; also, The Harvill Press (22 September 1986), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-00-272518-7
மற்றவர்களின் புத்தகங்கள்
- Wild Heart: The Story of Joy Adamson, Author of Born Free by Anne E. Neimark.
- Sleeping With Lions by Netta Pfeifer
- Joy Adamson : Behind the Mask by Caroline Cass.
- The Great Safari: The Lives of George and Joy Adamson by Adrian House
திரைப்படங்கள்
- Born Free
- Living Free
- Elsa & Her Cubs – 25 நிமிடங்கள்;[17] Benchmark Films Copyright MCMLXXI by Elsa Wild Animal Appeal and Benchmark Films, Inc.
- Joy Adamson – ஆடம்சைப் பற்றி[18] – Producer-Benchmark Films, Inc.
- Joy Adamson's Africa (1977) – 86 நிமிடங்கள்[19]
- The Joy Adamson Story (1980) – ஜாய் ஆடம்சனின் வாழ்க்கை மற்றும் ஆத்திரியா, ஆப்பிரிக்காவில் அவரது பணி மற்றும் அவரது பிரபலமான பெண் சிங்கமான எல்சா பற்றிய நேர்காணல்களைக் கொண்ட நிகழ்ச்சி. இயக்குனர்: டிக் தாம்செட் தயாரிப்பு நிறுவனம்: பிபிசி[20]
மேற்கோள்கள்
- ↑ 'Elsa the Lioness'. BBC, 3 February 1961. Retrieved 19 September 2024
- ↑ "Pride and Joy" (PDF). August 2009. p. 34. Archived from the original (PDF) on 4 March 2016. Retrieved 22 March 2013.
- ↑ 3.0 3.1 3.2 Loewen Haag, Karin (1 January 2002). "Adamson, Joy (1910–1980)". Archived from the original on 29 March 2015. Retrieved 31 January 2015 – via HighBeam Research.
- ↑ Beranová, Zuzana (2022). Dlouhé safari z Opavy do Keni [Long safari from Opava to Kenya] (in செக்). Opava. ISBN 978-80-7572-031-3.
{{cite book}}: CS1 maint: location missing publisher (link) - ↑ "Viktor Isidor Ernst Ritter von Klarwill]". Geni.com. Retrieved 3 August 2015.
- ↑ Bear, John (1992). The #1 New York Times Best Seller: intriguing facts about the 484 books that have been #1 New York Times bestsellers since the first list, 50 years ago. Berkeley, California: Ten Speed Press. p. 78. ISBN 978-0898154849.
- ↑ "The Life and Times of Joy Adamson". FunTrivia.com. Retrieved 31 January 2015.
- ↑ "Peoples of Kenya". Retrieved 2 January 2018.
- ↑ "A Lion Called Christian: An exhibition of the works of Joy Adamson". 18 October 2011. Retrieved 2 January 2018.
- ↑ Joy, Adamson (1972). Joy Adamson's Africa. ISBN 0-15-146480-4.
- ↑ Brittain, Victoria (8 January 1980). "Kenyans Say Murder Suspected in the Death of 'Born Free' Author". தி வாசிங்டன் போஸ்ட் (Washington, DC). https://www.washingtonpost.com/archive/politics/1980/01/08/kenyans-say-murder-suspected-in-the-death-of-born-free-author/0cd54009-6e9e-484f-a5a5-e70a00cf0110/.
- ↑ "Report suggests Joy Adamson murdered". https://news.google.com/newspapers?id=idgvAAAAIBAJ&pg=6779,849339.
- ↑ "AROUND THE WORLD; Kenyan is Convicted in Death of Joy Adamson". https://www.nytimes.com/1981/08/29/world/around-the-world-kenyan-is-convicted-in-death-of-joy-adamson.html.
- ↑ "Interview with Paul Nakware Ekai". https://www.theguardian.com/environment/2004/feb/08/kenya.conservation.
- ↑
- ↑ 16.0 16.1 Joy, Adamson (1972). Joy Adamson's Africa. p. 16. ISBN 0-15-146480-4.
- ↑ Elsa & Her Cubs
- ↑ Joy Adamson – ஆடம்சைப் பற்றி
- ↑ Joy Adamson's Africa
- ↑ The Joy Adamson Story