டோமாரி மொழி
Jump to navigation
Jump to search
| டோமாரி மொழி | |
|---|---|
Default
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-2 | inc |
| ISO 639-3 | rmt |
டோமாரி மொழி (Domari) ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது ரோமானி, ராஜஸ்தானி, கிழக்குப் பஞ்சாபி ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது மத்திய கிழக்கைச் சேர்ந்த டொம் எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, பாலஸ்தீனம் / இஸ்ரேல், ஆகிய பகுதிகளில் பரந்துள்ளனர். அராபியப் பகுதிகளில் இதற்கெனத் தனி எழுத்து வடிவம் கிடையாது. சமயங்களில் இது அரபி எழுத்துகளில் எழுதப்படுவது உண்டு. இம் மொழியில் ஏராளமான அரபி, பாரசீகச் சொற்கள் காணப்படுகின்றன.
அரபி மொழியில் இம்மொழியை நவாரி என அழைக்கின்றனர். இச்சொல் ஒரு இழிவு படுத்தும் சொல்லாகக் கருதப்படலாம்.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
- ரோமானி திட்டத்திலிருந்து டோமாரி பற்றிய விளக்கம் (ஆங்கில மொழியில்)
- டோமாரி கற்றல் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - டொம் ஆய்வு மையத்திலிருந்து. (ஆங்கில மொழியில்)