திக்கனா
Jump to navigation
Jump to search
திக்கனா
| இயற்பெயர் | திக்கன சோமயாஜி |
|---|---|
| பிறந்ததிகதி | 1205 |
| இறப்பு | 1288 |
| புனைபெயர் | திக்கனா |
| வகை | கவி |
திக்கன சோமயாஜி அல்லது திக்கனா (தெலுங்கு: తిక్కన్న) (1220 - 1300) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதிய மூவருள் இரண்டாமவர்.[1] முதலில் எழுதிய நன்னய்யா முதல் இரண்டரைப் பருவங்களைத் தான் மொழிபெயர்த்திருந்தார். அதுவும் வடமொழி மிகுதியுடன் இருந்தது. திக்கனா மூன்றாம் பருவம் தொடங்கிப் பதினெட்டாம் பருவம் வரைக்கும் எழுதினார். மூன்றாமவரான எர்ரண்ணா முழு பாரதத்தையும் எழுதினார்.
திக்கனா நெல்லூர் அரசரான மனுமசித்தியின் அரசவைக் கவியும் அமைச்சருமாவார். மகாபாரதம் எழுதும் முன்னர் சோமவேள்வியை நடத்தியவராதலால் சோமயாஜி என அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- ↑ "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012.