தோயாங்
Jump to navigation
Jump to search
| தோயாங் | |
|---|---|
தோயாங் ஏரி அணை | |
| சிறப்புக்கூறுகள் | |
| முகத்துவாரம் | தன்சிரி ஆறு |
• ஆள்கூறுகள் | 26°15′55″N 93°34′16″E / 26.2653°N 93.5712°E |
| நீளம் | 150 km (93 mi) |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | துசு–சிட்சு→ தோயங்→ தன்சிரி ஆறு→ பிரம்மபுத்திரா ஆறு→வங்காள விரிகுடா |
தோயாங் (Doyang) என்பது இந்திய மாநிலமான நாகாலாந்தின் மிக நீளமான, மிகப்பெரிய ஆறு ஆகும். நாகாலாந்து-அசாம் எல்லைக்கு அருகிலுள்ள சிறிய நீரோடைகளிலிருந்து தோன்றியதால், இது முதலில் துசு-சிட்சு ஆறாகப் பாய்கிறது. இது கோகிமா மாவட்டம், பெக் மாவட்டத்தில் இணையான திசையில் பாய்ந்து ஜுன்ஹேபோட்டோ மாவட்டத்தில் சந்திக்கிறது. பின்னர் இது வோகா மாவட்டத்தில் ஓடுகிறது. இங்கு இது இதன் பெயரான தோயாங் என்று அழைக்கப்படுகிறது. மேலும் தென்மேற்கு திசையிலும் பின்னர் வடக்கே அசாமிலும் சென்று தன்சிரி ஆற்றுடன் இணைகிறது. இது பிரம்மபுத்திரா ஆற்றின் இடது கிளை ஆறாகும்.[1]
அணை

தோயாங் நீர்மின் திட்டம் நாகாலாந்தில் உள்ள பெரிய அணை ஆகும். இது 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மொத்த நிறுவப்பட்ட திறன் 75 (3 X 25 மெகாவாட்) ஆகும்.[2]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "List of Rivers of Nagaland". Nagaland GK. Retrieved 30 October 2022.
- ↑ "DOYANG HYDRO ELECTRIC PLANT | North Eastern Electric Power Corporation Limited". neepco.co.in. Retrieved 30 October 2022.