ஆள்கூறுகள்: 19°28′27″N 72°48′39″E / 19.4742°N 72.8107°E / 19.4742; 72.8107

நரிங்கி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நரிங்கி
Naringi

கிராமம்
நரிங்கி Naringi is located in மகாராட்டிரம்
நரிங்கி Naringi
நரிங்கி
Naringi
மகாராட்டிராவில் அமைவிடம்
நரிங்கி Naringi is located in இந்தியா
நரிங்கி Naringi
நரிங்கி
Naringi
நரிங்கி
Naringi (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°28′27″N 72°48′39″E / 19.4742°N 72.8107°E / 19.4742; 72.8107
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம் மாவட்டம்|பால்கர்
வட்டம்வசாய்
ஏற்றம்
11 m (36 ft)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

நரிங்கி (Narangi) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டம் விரார் நகரில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

புவியியல்

19°28′N 72°48′E / 19.47°N 72.8°E / 19.47; 72.8.[1] என்ற புவியியல் ஆள்கூறுகளில் நரிங்கி கிராமம் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்தின் காலநிலை வெப்பமண்டல வகையைச் சேர்ந்ததாகும். கோடை காலத்தில் ஈரப்பதம் மிக அதிகமாகவும் குளிர்காலத்தில் காலநிலை பெரும்பாலும் வறண்டதாகவும் இருக்கும். அதிகம் முதல் மிக அதிகம் வரையிலான மழைப்பொழிவு பெறும் பகுதியில் நரிங்கி அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில், இப்பகுதி பெரும்பாலும் பேரழிவு தரும் மழையை எதிர்கொள்கிறது.

நிர்வாகம்

நரிங்கி கிராமம் சமீபத்தில் உருவாக்கப்பட்ட வசாய்-விரார் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதாகும். மாநகராட்சியின் 5ஆவது வார்டின் கீழ் இக்கிராமம் வருகிறது. பகுசன் விகாசு ஆகாடி கட்சியைச் சேர்ந்த வசந்த் மங்கேலா இந்தப் பகுதியின் மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் ஒரு சமூக சேவகர் மற்றும் மணல் அள்ளுவதில் உறிஞ்சும் பம்புகளைப் பயன்படுத்துவதற்கு எதிராகப் போராடும் பாரம்பரிய மணல் அள்ளுபவர்களின் அமைப்பான ஜெய் பவானி ரெட்டி உத்பாதக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.[2]

மக்கள் தொகை

இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மங்கேலா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 'மங்கேலா' என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் மராத்தி மொழியில் மீன்பிடி வலைகள் என்று பொருள்படும் மங் என்ற வார்த்தையிலிருந்தும், எலா என்றால் மக்கள் என்ற பொருள்படும் வார்த்தையிலிருந்தும் வந்தது. உண்மையில், இந்த வார்த்தைக்கு மீனவர் என்று பொருள், மங்கேலா கோலி என்பது கோலி மீனவர்களின் சமூகமாகும்.[3]

மேற்கோள்கள்

  1. Falling Rain Genomics, Inc - Virar
  2. Ram Parmar (2010-02-15). "HC bans illegal sand dredging at Vaitarna". Mumbai Mirror. Retrieved 2011-01-29.
  3. "Mangela Kolis - the origin". Retrieved 2011-01-29.
"https://tamilar.wiki/w/index.php?title=நரிங்கி&oldid=411552" இலிருந்து மீள்விக்கப்பட்டது