பரம்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பரம்பூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பஞ்சாயத்து தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பரம்பூர் (Parambur) என்பது தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா,அன்னவாசல் ஒன்றியத்தில் அமைந்துள்ள கிராமம். இவ்வூரானது புதுக்கோட்டையிலிருந்து சுமார் 25கிமீ தொலைவிலும், அன்னவாசலில் இருந்து சுமார் 8கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மொழி

தமிழ், கன்னடம், சௌராஷ்டிரம் போன்ற மொழிகள் இங்குள்ள மக்களால் பேசப்படுகிறது.

சமயம்

இந்து, முஸ்லிம், கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு சமய வேறுபாடின்றி ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.

கோவில்கள்

சிவன்கோவில், பெருமாள் கோவில், ஆகாசக்கருப்பர், அய்யனார், பகவதி அம்மன், மந்தையம்மன், பிடாரி அம்மன், தேரடிக்கருப்பர், கிருஷ்ணன் கோவில், மதுரைவீரன், கன்னிமார் கோவில் மற்றும் இஸ்லாமியர்களின் மசூதி, கிறித்தவர்களின் தேவாலயம் போன்றவையும் இங்கு அமைந்துள்ளன.

பள்ளிகள்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்றும், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றும் இங்கு அமைந்துள்ளது.

மருத்துவமனை

தரம்உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.

தொழில்

விவசாயம், கிரானைட் கல்குவாரி, கூலி, செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் (2006ஆம் ஆண்டு வரை.தற்போது நலிவடைந்த நிலையில்) மக்களின் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பரம்பூர்&oldid=426570" இலிருந்து மீள்விக்கப்பட்டது