பாரூர்
பாரூர் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635201 |
பாரூர் (Barur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.
வரலாறு
பாரூரில் பழமை மிக்க சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 13ஆம் நூற்றாண்டின் போசள மன்னன் வீர இராமநாதனின் நாற்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. அக்கல்வெட்டில் பாரூர் சிவன் கோயிலுக்கு வேலம்பட்டு என்ற சிற்றூரை சர்வமானியமாக கொடுத்த செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் வழியாக 13ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த ஊர்ப் பெயர் அக்காலத்தில் இருந்து மாறாமல் இருப்பது அறியவருகிறது. [1]
அமைவிடம்
இந்த ஊரானது காவேரிப்பட்டணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1069 குடும்பங்கள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4081 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2039, பெண்களின் எண்ணிக்கை 2042 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 68.9% என உள்ளது.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.