பிரம்மாஜி
| பிரம்மாஜி | |
|---|---|
| பிரம்மாஜி 2023 -இல்பிரம்மாஜி | |
| பிறப்பு | 25 ஏப்ரல் 1965 சாமரலகோட்டா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது வரை |
பிரம்மாஜி (Brahmaji) (பிறப்பு ஏப்ரல் 25,1965) தெலுங்குத் திரைப்படங்களின் பணிபுரியும் ஓர் நடிகர் ஆவார்.[1][2] இயக்குனர் கிருஷ்ண வம்சியின் படங்களில் வழக்கமான நடிகராக உள்ளார். கிருஷ்ண வம்சியின் முதல் படமான குலாபியில் (1995) பிரம்மாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.[3]
கிருஷ்ண வம்சியின் இரண்டாவது படமான நின்னே பெல்லத்ததா என்ற படத்தில் நடித்தார். கிருஷ்ண வம்சி இவரை சிந்தூரம் திரைப்படத்தில் முன்னணி நடிகராக ஆக்கினார். பின்னர் பிரம்மாஜி ஒரு குணச்சித்திர நடிகராகத் தொடர்ந்தார். சமக்கா சரக்கா, இன்ஸ்பெக்டர், காக்கி, ஐடியா, அந்தரிகி வந்தனலு, ஆத்யாக்ஷா, தூம் தாம், அப்போ வாடா, கும்பகோணம் மற்றும் என். எச்-5 போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். பல்வேறு தெலுங்குத் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்ததற்காக 2018 ஆம் ஆண்டில் 16 வது சந்தோஷ் திரைப்பட விருதுகளில் ‘சந்தோசம் அல்லு ராமலிங்கையா சமாரகம் விருது’ பெற்றார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Actor Brahmaji wants to become a director". The Times of India. 2017-01-15. Archived from the original on 20 April 2018. Retrieved 2018-04-19.
- ↑ Kavirayani, Suresh (2017-10-11). "Brahmaji, a friend for all". Deccan Chronicle. Archived from the original on 20 April 2018. Retrieved 2018-04-19.
- ↑ "Brahmaji Trolls Rana Daggubati After He Confirms Relationship With Miheeka Bajaj". filmibeat. May 13, 2020. Retrieved May 14, 2020.
- ↑ "Actor Brahmaji thanks Ram Charan for the pivotal role of Obanna in 'SyeRaa Narasimha Reddy'". The Times of India. 2019-10-06. Retrieved 2019-10-07.