பி4எம்கே1
Jump to navigation
Jump to search

பி4எம்கே1 பாக்கிஸ்தான் நாட்டில் தயாரிக்கபட்ட மனிதர்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இது இலங்கை, ஆப்கானிஸ்தான், அங்கோலா, எரித்திரியா, எதியோப்பியா இந்தியா ஆகிய நாடுகளிற் பயன்படுத்தப்பட்டது. இது 30 கிராம் அளவிலான Tetryl வெடிபொருளைக் கொண்டிருக்கும். . ஜொனி 99 இதைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டதாக சிலராற் கூறப்பட்டாலும் ஜொனி 99 அளவிற் பெரியதுடன் கூடுதலான வெடிபொருளையும் கொண்டுள்ளது. குறைந்தளவே உலோகத்தைக் கொண்டிருப்பதால் பெரும்பாலான மிதிவெடிகளை கண்டுபிடிக்கும் உபகரணங்களால் கண்டுபிடிப்பது சிரமமானதாகும். இது 4 செண்டிமீட்டர் உயரமானதுடன் விட்டம் 7 செண்டிமீட்டர் அளவானது. இவை மண்ணிறத்தில் இருக்கும் சிலசமயங்களில் பச்சைநிறத்தில் இருக்கலாம் கூறப்பட்டாலும் இலங்கையில் பச்சை நிறத்தில் இவை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உசாத்துணை
- ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கையில் உள்ள மிதிவெடிகள், வெடிக்காத வெடிநிலையில் உள்ள வெடிபொருட்கள் பற்றிய துண்டுப்பிரசுரம்.
- பி4எம்கே1, பி4எம்கே2 பரணிடப்பட்டது 2012-07-06 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கில மொழியில்)
- ஹலோ ரஸ்ட் இன் வெடிபொருள் அகற்றுவோரின் புத்தகம் (ஆங்கில மொழியில்)
| மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி | |
|---|---|
| ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95 |