புள்ளலூர்
Jump to navigation
Jump to search
புள்ளலூர் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 2,690 |
| மொழிகள் | |
| • அலுவல் முறை | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாசாபாத் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12-இல் பல்லவ அரசன் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடந்த புள்ளலூர்ப் போர், ஐதர் அலிக்கும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள்.
மக்கள்தொகை
புள்ளலூரின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,690; இதில் ஆண்கள் 1315 பெண்கள் 1375. பாலின வீதம் 1046 மற்றும் படிப்பறிவு வீதம் 63.52
மேற்கோள்கள்
உசாத்துணை
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.