பெண்ணியல்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| பெண்ணியம் தொடரின் பகுதி |
|---|
| பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
|---|
| முதன்மை ஆக்கங்கள் |
| முதன்மை கோட்பாட்டாளர்கள் |
| முக்கிய கோட்பாடுகள் |
பெண்ணியல் அல்லது மகளிரியல் என்பது பெண்களை பற்றி படிக்கும் துறையாகும். அரசியல் ,சமூகம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் புரியும் சாதனைகள் மற்றும் வரலாற்றில் அவர்கள் வகித்த பங்குகள் போன்றவை சம்பந்தமான படிப்பாகும். இதனை பெண்ணுரிமை படிப்பு (Feminist Studies) என்றும் அழைப்பார்கள். இத்துறையில் ஆண், பெண் பாகுபாடு, இன வேறுபாடு, சமூக வேறுபாடு, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வரலாறு
1970ம் ஆண்டு சான்டியாகோ மாநில பல்கலைக்கழகம் இந்த படிப்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
பாடப்பிரிவுகள்
பெண்களை பற்றிய படிப்பாக இருந்தாலும் இருபாலரும் படிக்கலாம். பெண்மை தத்துவம், பெண்களும் சமூகவரலாறும், பெண்களின் கற்பனை புதினம், பெண்களின் சுகாதாரம், பெண்களின் உளவியல், தற்காப்புத் திறன் போன்ற பகுதிகள் இத்துறையின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் இந்தப் படிப்பை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள்
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
- பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
- பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
- அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
- இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி
- பஞ்சாபி பல்கலைக்கழகம், பட்டியாலா
- லேடி டோக் கல்லூரி, மதுரை