போர்டோ நோவோ

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Porto-Novo vue.jpg
போர்டோ-நோவோ

போர்டோ-நோவோ (Porto-Novo) என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் நாட்டின் தலைநகராகும். 1904-1958 வரை பிரெஞ்சு டஹொமெய் என்று அழைக்கப்பட்ட ஒரு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியின் தலைநகராகவும் விளங்கியது. இந்த இடம் பெனின் நாட்டில் உள்ள 77 கோம்யூன்களில் ஒன்று. போர்டோ நோவோ சுற்றியுள்ள பகுதியில் இருந்து பனை எண்ணை, பருத்தி மற்றும் இலவம் பஞ்சு கிடைக்கிறது. இதன் பரப்பளவு 110 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை அடர்த்தி 2400/சதுர கிலோமீட்டர். பெனின் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரம்.

இங்கு இருக்கும் கரையோரம் பாறை எண்ணெய் உள்ளதை 1990-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பாறை எண்ணெய் இந்நாட்டின் ஒரு மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பொருள். இங்கு சுமார் 2,50,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1500-ஆம் ஆண்டு இங்கு இருந்த போர்ச்சுகீஸியரால் இந்த பெயர் வழங்கப்பட்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=போர்டோ_நோவோ&oldid=454056" இலிருந்து மீள்விக்கப்பட்டது