ஆள்கூறுகள்: 12°20′N 86°25′W / 12.333°N 86.417°W / 12.333; -86.417

மனாகுவா ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மனாகுவா ஏரி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
1986ல் மனாகுவா ஏரி
ஆள்கூறுகள்12°20′N 86°25′W / 12.333°N 86.417°W / 12.333; -86.417
முதன்மை வெளியேற்றம்திபிதாபா ஆறு
வடிநில நாடுகள்நிக்கராகுவா
அதிகபட்ச நீளம்65 km (40 mi)
அதிகபட்ச அகலம்25 km (16 mi)
மேற்பரப்பளவு1,024 km2 (395 sq mi)
சராசரி ஆழம்9.5 m (31 அடி)
அதிகபட்ச ஆழம்20 m (66 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்39 m (128 அடி)
குடியேற்றங்கள்மனாகுவா
படிமம்:Lake Nicaragua 2.jpg
நிக்கராகுவாவில் அமைந்துள்ள நிக்கராகுவா ஏரியும் மனாகுவா ஏரியும்

மனாகுவா ஏரி (Lake Managua), நிக்கராகுவா நாட்டில் உள்ள நிக்கராகுவா ஏரிக்கு வடக்கில் அமைந்த ஒரு நன்னீர் ஏரி ஆகும்.. இதன் கரையில் நாட்டின் தலைநகரான மனாகுவா நகரம் உள்ளது. மனாகுவா எரி 1,042 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 65 கிலோ மீட்டர் நீளமும்; 25 கிலோ மீட்டர் அகலமும்; 5 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மனாகுவா ஏரியிலிருந்து திபிதாபா ஆறு கிழக்கு நோக்கி பாய்ந்து கரிபியக் கடலில் கலக்கிறது. மனாகுவா ஏரிப் பகுதிகளில் பூர்வகுடிகளாக நிக்கராவ் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.[1] இந்த ஏரியில் மக்கள் வாழாத இரண்டு தீவுகள் உள்ளது. அவற்றில் ஒன்று எரிமலைத் தீவு ஆகும்.

மாசு

மனாகுவா ஏரியைச் சுற்றி அமைந்த மனாகுவா நகரத்தில் 16,80,100 மக்கள் வாழ்வதாலும், 1927ஆம் ஆண்டிலிருந்து மனாகுவா நகரத்தின் கழிவுகள் மனாகுவா ஏரியில் கொட்டப்படுவதாலும் மனாகுவா ஏரி நீர் மிகவும் மாசடைந்துள்ளது.[2] 2009ஆம் ஆண்டில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் ஆலை நிறுவப்பட்டதால், மனாகுவா நகரத்தின் 40% கழிவு நீர் சுத்திகரித்து ஏரியில் விடப்படப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Nicarao".
  2. Hazel Plunkett. Nicaragua: A Guide to the People, Politics and Culture. Interlink Books, Dec 1, 2001. pg. 71

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மனாகுவா_ஏரி&oldid=459507" இலிருந்து மீள்விக்கப்பட்டது