மனோஷி நாத்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

மனோஷி நாத் (Manoshi Nath) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். மனோஷி, ருஷி சர்மா என்பவருடன் இணைந்து பூல்ஸ் பாரடைஸ் டிசைன்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினர். இவர்கள் இருவரும் இந்தியத் திரைப்படத் துறையில் விரிவாக வேலை செய்கிறார்கள். மேலும் தங்கள் படங்களுக்கு உண்மையான கதாபாத்திரங்களை உருவாக்கும் போது விவரங்களில் கவனம் செலுத்துவதற்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் ஆடை வடிவமைப்பில் நிலைத்தன்மையைப் பின்பற்றும் வடிவமைப்பாளர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1] 2009-இல் ஓய் லக்கி! லக்கி ஓய்! என்ற படமும், 2013-இல் சாங்காய் என்றத் திரைப்படமும் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளன.

ஆரம்பகால வாழ்க்கை

மனோஷி அசாமைச் சேர்ந்த ஓர் வங்காளி/சிலோட்டி மொழி பேசுபவர் ஆவார். புதுதில்லியில் வளர்ந்த இவர், அங்கு தனது பட்டப்படிப்பை முடித்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே கலைகளில் ஆர்வம் கொண்ட மனோஷி, கல்லூரியில் இருந்தபோதே, திரைக்கதையில் இயக்குனர்களுடன் பயிற்சி பெற்றார். இவர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலும் சிலகாலம் பணி செய்து வந்தார். அங்கு கலை மற்றும் துணிகளின் சரியான கலவையைக் கண்டார். கூடுதலாக துணிப் பொறியாளராக இருக்கும் தனது தந்தையிடம் துணி பற்றிய தொழில்நுட்ப அறிவை மனோஷி பெற்றுக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

மனோஷி எப்போதும் விளம்பரங்களில் பணியாற்ற விரும்பினா. மேலும் இயக்குனர் பிரதீப் சர்க்காருடன் பல இசைக் காணொளிகளில் பணியாற்றினார். அப்போது தனது படைப்பு கூட்டாளர் ருஷி சர்மாவை 2000 ஆம் ஆண்டில் சந்தித்தார்.

மனோஷியும் ருஷியும் 2006 ஆம் ஆண்டில் திபாகர் பானர்ஜியின் கோஸ்லா கா கோஸ்லா என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் முதல் திரைப்படத்தை வடிவமைத்தனர். இவர்கள் 2007 ஆம் ஆண்டில் பூல்ஸ் பாரடைஸ் என்ற நிறுவனத்தை நிறுவினர். அதைத் தொடர்ந்து இவர்கள் ஓய் லக்கி! லக்கி ஓய்! (2008), ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை (2010), ஷாங்காய் (2012) தலாஷ் (2012) குயின் (2013)[2] தக்ஸ் ஆப் இந்துஸ்தான் (2018)[3], ஷேர்னி (2021) ஷம்ஷேரா (2022)[4] போன்ற பலத் திரைப்படங்களில் பணியாற்ற ஆரம்பித்தனர்.

இவர்கள் இருவரும் ஆடை வடிவமைப்பு குறித்து வழிகாட்ட சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவத்திலும் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூயிலும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். . இவர்கள் ஆடை வடிவமைப்பு, உடைகள் மற்றும் வடிவமைப்பில் நிலைத்தன்மை ஆகியவற்றைச் சுற்றியுள்ள பாடத்திட்டத்தை உருவாக்குவதில் முனைந்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Rushi Sharma And Manoshi Nath Are Making The Wasteful Costume Design Industry Sustainable. Here's How". elle.in. Retrieved 2025-05-10.
  2. "Queen Look Test | Kangana Ranaut, Rajkummar Rao, Vikas Bahl | 7th Mar, 2014". YouTube. 25 February 2014.
  3. Panicker, Anahita (9 November 2018). "'We knew we weren't making a documentary'". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/we-knew-we-werent-making-a-documentary/article25456442.ece. 
  4. "Ranbir Kapoor - Shamshera's costume designers on the challenge of dressing up Ranbir Kapoor as father and son - Telegraph India". Archived from the original on 2022-07-26. Retrieved 2025-05-10.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மனோஷி_நாத்&oldid=459928" இலிருந்து மீள்விக்கப்பட்டது