மாற்றுவெளி
Jump to navigation
Jump to search
மாற்றுவெளி என்பது தமிழகத்திலிருந்து வெளியாகும் ஓர் ஆய்விதழாகும். பரிசல் புத்தக நிலையத்தினால் 2009 இலிருந்து வெளியிடப்படும் இந்த ஆய்விதழின் சிறப்பாசிரியர் வீ. அரசு ஆவார்.
மாற்றுவெளி ஆய்விதழ் குறிப்பாக ஒரு துறைசார்ந்து வெளிவரும் ஆய்விதழாக இல்லாமல் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு பொருண்மை சார்ந்து வெளிவருவதாக உள்ளது. ஒவ்வொரு பொருண்மை சார்ந்த இதழ்களுக்குக் குறித்த பொருண்மைத் துறைசார் அழைப்பாசிரியர்கள் பங்களிப்புச் செய்யும் வழக்கமும் காணப்படுகிறது.
கால்டுவெல், இந்தியப் பொருளாதாரம், கல்வி, ரோஜா முத்தையா நூலகம், நாவல்கள், மாற்றுப் பாலியல், தமிழ்ச் சமூக வரலாறு, போருக்குப் பிந்தைய ஈழம், தமிழ்ச் சித்திரக் கதைகள் ஆகிய தலைப்புக்களில் முதல் 9 இதழ்கள் வெளிவந்துள்ளன.