ஆள்கூறுகள்: 23°35′N 91°13′E / 23.58°N 91.22°E / 23.58; 91.22

மோகன்பூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மோகன்பூர்

மோகன்பூர்
Location of மோகன்பூர்
மோகன்பூர் is located in திரிபுரா
மோகன்பூர்
மோகன்பூர்
மோகன்பூர் is located in இந்தியா
மோகன்பூர்
மோகன்பூர்
ஆள்கூறுகள்: 23°35′N 91°13′E / 23.58°N 91.22°E / 23.58; 91.22
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
சட்டமன்றம்திரிபுரா சட்டமன்ற தொகுதி
அரசு
 • வகைநகராட்சி
 • தலைவர்சிரி மோதிலால் தாசு
 • சட்டமன்ற உறுப்பினர்இரத்தன் லால் நாத்
பரப்பளவு
 • நகரம்884 ha (2,184 acres)
ஏற்றம்
45 m (148 ft)
மக்கள்தொகை
 (2011)
 • நகரம்16,363
 • தரவரிசை10th
 • நகர்ப்புறம்
11,325
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
799211
இடக் குறியீடு0381
வாகனப் பதிவுTR 01 XX YYYY

மோகன்பூர் (Mohanpur, Tripura) வடகிழக்கு இந்தியாவின் திரிபுராவில் உள்ள ஒரு நகராட்சி மன்றமாகும். இது மாநிலத்தின் 10வது பெரிய நகரமாகவும், மேற்கு திரிபுரா மாவட்டத்தின் துணைப்பிரிவாகவும் அமைந்துள்ளது.[1]


மோகன்பூர் துணைப்பிரிவில் மொத்தம் 30 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, இவற்றில் அனங்நகர் அதிக மக்கள்தொகை கொண்டது கிராமம் ஆகும். அதைத் தொடர்ந்து விஜய்நகர், பிரம்மகுண்டா, தேபேந்திரநகர் ஆகியவை உள்ளன.[2]

மக்கள்தொகை

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, மோகன்பூரின் மொத்த மக்கள் தொகை 16,363 ஆக இருந்தது. இதில் ஆண்கள் எண்ணிக்கை 8,434 மற்றும் பெண்கள் எண்ணிக்கை 7,929 ஆவார்கள். பெரும்பாலான மக்கள் தொகை நகர்ப்புறங்களில் 11,325 பேர் உள்ளனர், அதே போல், 5,050 க்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மோகன்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 80.43% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 83.53% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 77.13% ஆகும்.[3]

காடு

மோகன்பூரின் துணைப்பிரிவில் மொத்தம் 73.869 கிமீ2 (வன) காட்டு நிலமாக அமைந்துள்ளது, இதில் 73.869 கிமீ2 பாதுகாக்கப்பட்ட காடு ஆகும்.[4]

போக்குவரத்து

மோகன்பூர் நகரத்தின் முக்கிய போக்குவரத்து அமைப்பு சாலைகளையே சார்ந்துள்ளது. மோகன்பூர் சாலை மற்றும் அசாம் அகர்தலா சாலை ஆகியவை முக்கிய சாலைகள் ஆகும். இந்த நகரத்தில் எந்த ரயில் நிலையங்களும் இதுவரை இல்லை. அருகிலுள்ள ரயில் நிலையம் ஜோகேந்திரநகரில் அமைந்துள்ளது. தலைநகர் அகர்தலாவிலிருந்து இந்த நகரம் சுமார் 23 கி.மீ தூரம் கொண்டதாகும்.[5]

கல்வி நிலையங்கள்

பள்ளிகள்[6]

மோகன்பூர் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி

மோகன்பூர் பெண்கள் 'ஹெச்.எஸ். பள்ளி

தாராபுரா உயர்நிலைப்பள்ளி

மோகன்பூர் தேயிலை தோட்டம் ஜே.பி. பள்ளி

காந்திகிராம் எச்.எஸ். பள்ளி

கல்லூரிகள்

சுவாமி விவேகானந்தா மகா வித்யாலயா

மேற்கோள்கள்

  1. "Subdivision & Blocks | West District, Government of Tripura | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-24.
  2. "STATEMENT SHOWING THE CATAGORY-WISE [sic] POPULATION OF GRAM PANCHAYATS VILLAGES UNDERDIFFERENT BLOCKS" (PDF). archive.ph. Retrieved 2022-11-24.
  3. "PCA: Primary Census Abstract C.D. Block wise, Tripura - District West Tripura - 2011".
  4. "Forest Department of Tripura". forest.tripura.gov.in. Retrieved 2022-11-24.
  5. "Nearest Railway Stations to West Tripura Mohanpur Singarbil Tripura West Tripura - Search Nearest Railway Stations of Any Place". trainspy.com. Retrieved 2022-11-24.
  6. "Affiliated Schools List as on 01.04 2020" (PDF).
"https://tamilar.wiki/w/index.php?title=மோகன்பூர்&oldid=478432" இலிருந்து மீள்விக்கப்பட்டது