லிசு மொழி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
லிசு
லிசுபா, கிசுபி
பிராந்தியம்அருணாச்சல பிரதேசம்
இனம்லிசிபா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1,500  (2017)[1]
சீன-திபெத்திய
  • கோ-ப்வா
    • லிசு
மொழிக் குறியீடுகள்
ISO 639-3lsh
மொழிக் குறிப்புlish1235[2]

லிசு மொழி (Lish language) (லிசுபா அல்லது கிசுபி என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங் மாவட்டத்தின் ஒரு கோ-ப்வா மொழியாகும். இது சுக் மற்றும் கோம்பாட்சே மொழிகளின் இதே மொழியின் ஒரு கிளைமொழியாகும்.

லிசு மக்கள் (1981-ல் மக்கள் தொகை 1,567) சுக் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் உள்ள டிரங் கிராமத்திலும், கோம்பாட்சேவிலும் வாழ்கின்றனர். கோம்பாட்சேவில் பேசப்படும் வகை, முறையான லிசு அல்ல. மாறாக இது லிசு மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு கிளைமொழியாகும்.[3]

கிசுபி கிராமத்திலும் லிசு மொழி பேசப்படுகிறது.[3] மெய் (செர்டுக்பென்) மொழியுடன் நெருங்கிய தொடர்புடைய மொழிகளைப் பேசினாலும், இம்மக்கள் தங்களை மெய் இனத்தவராக அல்லாமல், மோன்பா இனத்தவராகவே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

லீபர்கெர் & போட் (2017)[1]இன் படி, 3 முக்கிய கிராமங்களில் 1,500 மக்களால் லிசு மொழி பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Lieberherr, Ismael; Bodt, Timotheus Adrianus. 2017. Sub-grouping Kho-Bwa based on shared core vocabulary. In Himalayan Linguistics, 16(2).
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "கிசுபி". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. 3.0 3.1 Blench, Roger. 2015. The Mey languages and their classification. Presentation given at the University of Sydney.
"https://tamilar.wiki/w/index.php?title=லிசு_மொழி&oldid=487939" இலிருந்து மீள்விக்கப்பட்டது