விபுல் துபே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
விபுல் துபே
உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச்சு 2022
முன்னையவர்விஜய் மிஷ்ரா
தொகுதிஞான்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சனவரி 1982 (1982-01-27) (அகவை 44)
மில்கி, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிநிஷாத் கட்சி
துணைவர்சங்கீதா தேவி
பிள்ளைகள்3
பெற்றோர்
  • ராம் சாகர் துபே (தந்தை)
கல்விமுதுகலை (கலை)
முன்னாள் மாணவர்காசி நரேஷ் அரசு முதுநிலை கல்லூரி
பணிஅரசியல்வாதி, விவசாயி

விபுல் துபே (Vipul Dubey) (27 சனவரி 1982 அன்று பிறந்தவர்) இந்திய அரசியல்வாதி மற்றும் விவசாயி ஆவார். இவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஞான்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18-ஆம் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2] இவர் நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்.[1][3]

ஆரம்ப வாழ்க்கை

விபுல் துபே 27 சனவரி 1982 அன்று மில்கி என்ற ஊரில், ராம் சாகர் துபே அவர்களின் குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் சங்கீதா தேவியை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1]

கல்வி

விபுல் துபே, ஞான்பூர் நகரில் அமைந்துள்ள காசி நரேஷ் அரசு முதுநிலை கல்லூரியில் கலைப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.[4]

பதவிகள்

எண் இருந்து வரை பதவி
1 2022 தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (18-ஆம் சட்டமன்றம்)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly" (in இந்தி). உத்தரப் பிரதேச சட்டமன்றம். Retrieved 31 மே 2024.
  2. "Vipul Dubey, NISHAD MLA from Gyanpur". ourneta.com. Retrieved 31 மே 2024.
  3. "Vipul Dubey". PRS Legislative Research. Retrieved 31 மே 2024.
  4. "Vipul Dubey (Nirbal Indian Shoshit Hamara Aam Dal): Constituency – Gyanpur (Bhadohi)". myneta.info. Retrieved 31 மே 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=விபுல்_துபே&oldid=498496" இலிருந்து மீள்விக்கப்பட்டது