வி. ராஜா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வி. ராஜா
V. Rajah
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
செரண்டா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1959–1964
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சிசுயேச்சை
பணிஅரசியல்வாதி

வி. ராஜா (ஆங்கிலம்; மலாய்: V. Rajah) என்பவர் மலேசிய அரசியல்வாதி; 1959 முதல் 1964 வரை சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் செரண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாறியவர் ஆவார். இவர் 1959-ஆம் ஆண்டு மலாயா பொதுத் தேர்தலில் ஒரு சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மலாயா விடுதலைக்குப் பிந்தைய மலாயாவின் முதல் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய மரபுவழி உறுப்பினர்களில் இவரும் ஒருவராக அறியப்படுகிறார். இவர் எந்த ஓர் அரசியல் கட்சியையும் சாராமல் தனித்து நின்று, சுயேச்சையாக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல்

அந்தக் காலக்கட்டத்தில், அதாவது 1950-ஆம் ஆண்டுகளில், சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில். தோட்டத் தொழிலாளர்கள்; மற்றும் மலேசிய இந்தியர் சமூகத்தின் குரலாகத் திகழ்ந்தவர்களில் வி. ராஜா அவர்களும் ஒருவர் ஆவார். இவருடன் அதே காலக்கட்டத்தில் வி. டேவிட் (பந்தாய் சட்டமன்றத் தொகுதி) மற்றும் கரம் சிங் வெரியா (Karam Singh Veriah) (செர்டாங் சட்டமன்றத் தொகுதி) போன்றோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டனர்.

1964-க்குப் பிறகு செரண்டா தொகுதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பிற்காலத்தில் (1969-1974) கங்கா நாயர் என்பவர் இத்தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மலேசிய வரலாற்றில் மலேசிய மாநிலச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி (First Indian Woman to be elected to a Legislature in Malaysia) எனும் பெருமையும் கங்கா நாயர் அவர்களுக்கு உண்டு.[2]

ரவாங், செரண்டா பகுதிகளில் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக விளங்கிய அவர், அப்பகுதியில் நிறைய சமூகப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவர் மலேசியாவில் இந்தியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், குறிப்பாகத் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர்களில் ஒருவராகவும் அறியப் படுகிறார்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. John Victor Morais. Who's who in Malaysia and Guide to Singapore (1975 ed.). p. 82.
  2. "First Indian woman rep bemoans racial politics". 6 March 2008. Archived from the original on 4 March 2016. Retrieved 1 September 2015.

நூல்கள்

  • Abdullah, Z. G., Adnan, H. N., & Lee, K. H. (1997). Malaysia, tokoh dulu dan kini = Malaysian personalities, past and present. Kuala Lumpur, Malaysia: Penerbit Universiti Malaya.
  • Anzagain Sdn. Bhd. (2004). Almanak keputusan pilihan raya umum: Parlimen & Dewan Undangan Negeri, 1959-1999. Shah Alam, Selangor: Anzagain.
  • Hussain, M. (1987). Membangun demokrasi: Pilihanraya di Malaysia. Kuala Lumpur: Karya Bistari.
  • Ibnu, H. (1993). PAS kuasai Malaysia?: 1950-2000 sejarah kebangkitan dan masa depan. Kuala Lumpur: GG Edar.
  • Sankaran, R., Mohd, H. A. (1988). Malaysia's 1986 General Election: The Urban-Rural Dichotomy. Institute of Southeast Asian Studies.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வி._ராஜா&oldid=496143" இலிருந்து மீள்விக்கப்பட்டது