வி. வி. அபு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வி. வி. அபு
V. V. Aboo
பகாங் மாநில சட்டமன்றம்
லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1986–1990
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர் பகாரி யகாயா
பெரும்பான்மை2,184 (1986)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Valiyakath Vadakkeythilakkal Aboo Magadath Ahammu
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி மலேசிய இந்தியர் காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல்
வாழிடம்தெமர்லோ; பகாங்
பணிஅரசியல்வாதி

வி. வி. அபு எனும் வி. வி. அபு @ எம். அகமு (ஆங்கிலம்; மலாய்: V. V. Aboo அல்லது V. V. Aboo A/L M. Ahammu) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1986 முதல் 1990 வரை பகாங் மாநில சட்டமன்றத்தில், லஞ்சாங் சட்டமன்றத் தொகுதியின் (N31) சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் ஆவார். 1970-ஆம் ஆண்டுகளில் மலேசிய மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1980-ஆம் ஆண்டுகளில், பகாங் மாநிலத்தின் முக்கிய இந்தியர் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

லஞ்சாங் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த போது, லஞ்சாங் பகுதியில் வசித்த இந்தியர்த் தொழிலாளர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும்; அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிகளுக்காகவும் பல திட்டங்களை முன்னெடுத்தார். மேலும் இவர் பகாங் மாநில இந்தியர்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக மஇகா கட்சியின் மூலமாகப் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி

லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி என்பது பகாங், தெமர்லோ பகுதியில் தெமர்லோ மக்களவைத் தொகுதியில் (P88) அமைந்துள்ளது. லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் மெந்தகாப் பகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது.[3] இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் வி. வி. அபு அவர்கள் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மலேசிய இந்தியர் காங்கிரசு (MIC) கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வாக்காளர் எண்ணிக்கை

லஞ்சாங் சட்டமன்றத் தொகுதியின் 2022-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 32,774:[4][5]

அரசியல்

வி. வி. அபு அவர்கள் மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினராகவும்; அந்தக் கட்சியின் பகாங் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தேர்தல் முடிவுகள்

லஞ்சாங் சட்டமன்றத் தொகுதி, 1986
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
வி. வி. அபுபாரிசான் நேசனல்4,14567.88
அபு அசன் சென்டோல்மலேசிய இசுலாமிய கட்சி1,96132.12
மொத்தம்6,106100.00
செல்லுபடியான வாக்குகள்6,10694.61
செல்லாத/வெற்று வாக்குகள்3485.39
மொத்த வாக்குகள்6,454100.00
பதிவான வாக்குகள்9,1336,454
Majority2,18432.58

மேற்கோள்கள்

  1. "V. V. Aboo - ATUR CARA RASMI ISTIADAT PENGURNIAN GELARAN-GELARAN 27.10.1990". istiadat.gov. 27 October 1990. Retrieved 17 April 2026.
  2. "Senator Valiyakath Vadakkeythilakkal Aboo a/l Magadath Ahammu - SENARAI PENUH PENERIMA DARJAH KEBESARAN, BINTANG DAN PINGAT PERSEKUTUAN TAHUN 1978" (PDF). istiadat.gov. 27 August 2020. Retrieved 17 April 2026.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  5. "Notis Mengenai Daerah Mengundi Dan Pusat Mengundi Bagi Bahagian-bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Bagi Negeri-negeri Tanah Melayu / Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya; Federal Government Gazette" (PDF). Berita RTM. 30 March 2018. P.U. (B) 157(/2018); SPR(R)60 Jld. 21; PN(PU2)178C/LXXXVII. Retrieved 23 March 2026.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வி._வி._அபு&oldid=496153" இலிருந்து மீள்விக்கப்பட்டது