ஸ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஸ்
தமிழில் பயன்படுத்தப்படும்
கிரந்த எழுத்துகள்

ஸ் (s) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]

ஸகர உயிர்மெய்கள்

ஸகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.

சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர்
ஸ் + அ ஸானா
ஸ் + ஆ ஸா ஸாவன்னா
ஸ் + இ ஸி ஸீனா
ஸ் + ஈ ஸீ ஸீயன்னா
ஸ் + உ ஸு ஸூனா
ஸ் + ஊ ஸூ ஸூவன்னா
ஸ் + எ ஸெ ஸேனா
ஸ் + ஏ ஸே ஸேயன்னா
ஸ் + ஐ ஸை ஸையன்னா
ஸ் + ஒ ஸொ ஸோனா
ஸ் + ஓ ஸோ ஸோவன்னா
ஸ் + ஔ ஸௌ ஸௌவன்னா

[2]

பயன்பாடு

மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஸகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஸரஸ்வதி, ஸாமவேதம், ஸிம்பாப்வே, ஸீமெய், ஸுசன, ஸூஜாஹூலி, ஸென்டர், ஸே, ஸைபுல், ஸொப்ட், ஸோங், ஸௌ, பஸ் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.

கிரந்தக் கலப்பற்ற தமிழ்

ஸகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஸகரத்தைச் சகரமாக எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஸகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸரஸ்வதி-சரசுவதி, ஸிம்பாப்வே-சிம்பாப்வே).

சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஸகர உயிர்மெய் வந்தால் அதனைச் சகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: நாஸா-நாசா). சில இடங்களில் தகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: வாசனை-வாதனை).

மொழிக்கு முதலில் ஸ் வந்தால் முன்னே ஓர் உயிரெழுத்தைச் சேர்த்து (அகரம், இகரம், உகரம், எகரம்) ஸ் எழுத்தைச் சு எழுத்தாக்கி எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸ்பானியா-எசுப்பானியா, ஸ்க்கைப்-இசுக்கைப்பு). சில இடங்களில் சி எழுத்தாக்கியும் எழுதப்படும் (எடுத்துக்காட்டு: ஸ்நேகம்-சிநேகம்). முன்னே உயிரெழுத்துச் சேர்க்க வேண்டிய தேவையின்றியும் சில இடங்களில் வருவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சுவாமி). இலங்கை வழக்கின்படி ஸ் எழுத்தை நீக்கி விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்டர்ம்-தேம்). இவை தவிர வேறு விதங்களிலும் திரிபு இடம்பெறுவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சாமி). சொல்லின் இடையில் ஸ் வந்தால் அதனைச் சு, சி ஆகியவற்றால் குறிப்பிடுவதுண்டு (எடுத்துக்காட்டு: அரிஸ்ட்டாட்டில்-அரிசுட்டாட்டில், அரிசிட்டாட்டில்). சில வேளைகளில் அதற்குப் பின்வரும் எழுத்தின் மெய்யெழுத்தை ஸ் எழுத்திற்குப் பதிலாக இடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: கிறி்ஸ்தவம்-கிறித்தவம்). சில இடங்களில் ஸ் ஆனது ற் ஆகத் திரிவதுமுண்டு (எடுத்துக்காட்டு: சமஸ்கிருதம்-சமற்கிருதம்).[3] சொல்லொன்றின் இறுதியில் ஸ் வருமாயிருந்தால் அதனைச் சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விண்டோஸ்-விண்டோசு, பஸ்-வசு).

மேற்கோள்கள்

  1. 6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
  2. "தமிழ் எழுத்துக்கள் + வடமொழி எழுத்துகள்". Archived from the original on 2012-05-27. Retrieved 2012-04-22.
  3. எழுத்தியல்
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்&oldid=505617" இலிருந்து மீள்விக்கப்பட்டது