பவானி

imported>Tom8011 பயனரால் செய்யப்பட்ட 20:18, 18 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Fixed typo)


பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் மற்றும் பவானி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

பவானி
—  நகரம்  —
பவானி
அமைவிடம்: பவானி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°26′23″N 77°40′56″E / 11.439605°N 77.68218°E / 11.439605; 77.68218
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் பவானி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர்
ஆணையர்
சட்டமன்றத் தொகுதி பவானி

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சி. கருப்பண்ணன் (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

39,225 (2011)

18,076/km2 (46,817/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.17 சதுர கிலோமீட்டர்கள் (0.84 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/bhavani/

இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள குமாரபாளையத்தை இணைக்க 3க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளன. குறிப்பாகப் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேளையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் மிகுதியாகக் கூடுவார்கள். பவானி ஆறு, காவிரி ஆறு கூடும் கூடுதுறையில் அமாவாசை தினங்களில் பக்தர்கள், தம் குடும்பத்தில் உயிர்நீத்த முன்னாேர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது மிகவும் புகழ் பெற்றது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 39,225 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பவானி நகர மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=190506" இலிருந்து மீள்விக்கப்பட்டது