பழனி

imported>Muthu2020 பயனரால் செய்யப்பட்ட 18:08, 14 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

பழனி (Palani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

பழனி
—  நகரம்  —
பழனி
அமைவிடம்: பழனி, தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′24″N 77°31′05″E / 10.44°N 77.518°E / 10.44; 77.518
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர் வ, ராஜமாணிக்கம்
மக்கள் தொகை

அடர்த்தி

67,231 (2001)

10,140/km2 (26,262/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.63 சதுர கிலோமீட்டர்கள் (2.56 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/palani/
பழனி மலையின் தோற்றம்
கோடைக்கானலிருந்து பழனியின் தோற்றம்

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வழிபாட்டுத்தலங்கள்

பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.

இந்து வழிபாட்டுத்தலங்கள்
  • பழனி முருகன் கோயில்(பழனி மக்கள் சாமியா மலை என அழைப்பர்)
  • திருவாவினன்குடி முருகன் கோவில் (அறுபடை வீடுகளில் ஒன்று)
  • பெருமாள் கோயில்
  • பெரியநாயகி அம்மன் கோயில்(யானைக்கோயில்)
  • ரெணகாளியம்மன் கோயில்.
  • மாரியம்மன் கோயில்
  • பட்டத்து விநாயயகர் கோயில்
இசுலாமிய வழிபாட்டுதலங்கள்
 
பெரிய பள்ளிவாசல்
  • பெரிய பள்ளிவாசல்
  • சின்ன பள்ளிவாசல்
  • அல் ஃபலாஹ் பள்ளிவாசல்

சுற்றுலாத் தலங்கள்

பழனிக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்:

கல்வி நிருவணங்கள்

கல்லூரிகள்
  • அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் கலை கல்லூரி
  • அருள்மிகு பழநி ஆண்டவர் பென்கள் கலை கல்லூரி
  • திரு சுப்ரமணியா பொரியியல் கல்லூரி

மேற்கோள்கள்

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பழனி&oldid=191649" இலிருந்து மீள்விக்கப்பட்டது