ஓமலூர்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 14:40, 14 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்

ஓமலூர் (Omalur), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தின், ஓமலூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

சேலம் - மேட்டூர் சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த வானூர்தி நிலையம், சேலம், கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கு ஓமலூர் தொடருந்து நிலையம் உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் ஈரோடு உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.5 கிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 மக்கள்தொகையும், கொண்டது.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஓமலூர்&oldid=203259" இலிருந்து மீள்விக்கப்பட்டது